watch: ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்...

ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்; செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Last Updated : Aug 25, 2019, 12:02 PM IST
watch: ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்... title=

ஒருவழியா ரிலீஸ் ஆனது என்னை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்; செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. 

இதனையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதன் படி திரைத்துறையில் நயாகி சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சிக்கும் நாயகன் சந்திக்கும் பல இன்னல்கள் குறித்த கதை கருவை கொண்டுள்ளது இந்த படம் என தெரிகிறது. 

இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பல காரணங்களால் பட வெளியீடு தாமதமானது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Trending News