சனி வக்ர பெயர்ச்சி... பொற்காலத்தை அனுபவிக்கும் ‘சில’ ராசிகள்!

சனி தேவன் நீதியின் கடவுளாகவும் கர்மாவிற்கு ஏற்ற பலன்களை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். அதனால், ஜோதிடத்தில் சனிக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 22, 2023, 12:01 PM IST
  • வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது.
  • புதிய கார் அல்லது வீடு வாங்கலாம்.
  • திடீரென்று எங்கிருந்தோ பணம் வருவதைக் காணலாம்.
சனி வக்ர பெயர்ச்சி... பொற்காலத்தை அனுபவிக்கும் ‘சில’ ராசிகள்! title=

ஜோதிடத்தில் சனிக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம். இதன் காரணமாக அதன் நிலையில் ஏற்படும் மாற்றத்தினால், ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். சனி ஏதேனும் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் தங்கி, அதன் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். சனி தேவன் நீதியின் கடவுளாகவும் கர்மாவிற்கு ஏற்ற பலன்களை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். தனிநபர்கள் செய்யும் அசுப, பாவ செயல்களின் அடிப்படையில் மட்டுமே சனி கிரகம் பலன்களை அளிக்கிறது. யாருடைய ஜாதகத்தில் சனி அசுபமான வீட்டில் இருக்கிறாரோ, அவர்கள் பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வருவார்கள், அதே சமயம் சனி அருள் கிடைத்தால், ஆண்டியும் அரசனாகலாம்.

சனி தேவன் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அங்கு அவர் வக்ர நிலையில் இருக்கிறார். சனி 03 நவம்பர் 2023 வரை கும்ப ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் தனது சொந்த ராசியில் இருக்கும்போது மற்றும் அதன் வக்ர நிலை காரணமாக, அனைத்து ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கை பொற்காலமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

ரிஷபம்

கும்ப ராசியில் சனியின் வக்ர நிலை சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். வேலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பல வகையான நல்ல ஆஃபர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக உங்களின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் சிறப்பாக வருகிறது. உங்கள் வேலையில் நல்ல திறன் மற்றும் நம்பிக்கை இருக்கும். இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். சமூகத்தில் மரியாதை கிடைத்து உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
 
துலாம்

2023 நவம்பர் 3 வரை சனி வக்ர நிலையில் இருப்பது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், எந்த ஒரு தொழிலில் இருப்பவர்களுக்கும் நல்ல வெற்றி கிடைக்கும். சனி பகவான் உங்கள் மீது அருள் மழை பொழிவார். இதன் காரணமாக நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் புதிய கார் அல்லது வீடு வாங்கலாம். திடீரென்று எங்கிருந்தோ பணம் வருவதைக் காணலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் தான்!

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலை மிகவும் பலன் தரும் அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்கள் பணியைப் பாராட்டி உயர் பதவியைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடன் தோளோடு தோள் நின்று உதவியாக இருப்பார்கள். உங்கள் பேச்சின் மூலம் மக்களை உங்களை நோக்கி ஈர்க்க முடியும். இந்த நேரத்தில், உங்கள் வேலை விரைவில் முடியும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் தடைபட்ட வேலைகள் நிறைவடையும். நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், இந்த 4 மாதங்களில் நீங்கள் பலனடைவீர்கள் மற்றும் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

மகரம்

சனியின் வக்ர நிலை சஞ்சாரத்தினால், மகர ராசிக்காரர்களுக்கு லாபம் மட்டுமே கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் சிறிய முயற்சியில் விரைவாகவும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கு பல நல்ல சலுகைகள் கிடைத்து, சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். சனி பகவான் உங்களிடம் மிகவும் அன்பாக இருக்கிறார். அதனால், வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Tips: தோஷங்கள் அனைத்தும் நீங்க... ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட செடிகள் இவை தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News