இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த அக்.,10 ஆம் நாள் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்து தாக்கினர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
ராஞ்சி கிரிக்கெட்டில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும், எங்கள் அணி வீரர்களை, ரசிகர்கள் பாராட்டினர், வரவேற்றனர். ஆனால் கவுகாத்தியில் கல் எரிந்து பேருந்து கண்ணாடி உடைத்த சம்பவம் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார்.
Guwahati cricket fans with sorry placards apologizing to Aussies outside Radisson Blu hotel pic.twitter.com/KqJJH3WNjw
— Mriganka(@Atheist_mrigen) October 11, 2017
Fans apologising to team #Australia outside their hotel #INDvAUS #Guwahati #BarsaparaStadium pic.twitter.com/7qADF5rtIa
— Vishal (@Vishal15067) October 11, 2017
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் விதமாக கவுகாத்தி கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வெளியே மன்னிப்பு வசனங்கள் எழுதிய சுவரொட்டிகளை கையில் ஏந்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.