Reshma Pasupuleti Lost 12 Kgs In 9 Months : தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்னத்திரையில் ஸ்டார் நடிகையாகவும் வலம் வருபவர், ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு மொழி தொலைக்காட்சி சேனலில் செய்து வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இப்போது தமிழ் சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு சீரியலில் முக்கிய பாத்திரமாக வந்து கொண்டிருக்கிறார். இவரை பலரும் அறிந்து கொண்டது, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வந்த ‘புஷ்பா’வாக தெரியும். தற்பாேது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார். இவர், 12 கிலோ எடையினை குறைத்ததாக தகவல்கள் பரவி வருகிறது.
12 கிலோ எடை குறைத்தாரா?
ரேஷ்மா, சீரியல்களில் முழு நேரமாக நடிப்பதற்கு முன்னர் படங்களில் ஒரு சில கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். அப்போது இவரது உடல் பார்ப்பதற்கு வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் சீரியல்களில் நடிக்க வந்த போது வேறு மாதிரியாக மாறிவிட்டார். இதையடுத்து சமீப காலங்களாக உடல் எடை குறைந்த காணப்பட்டார். இது குறித்து சமீபத்தில் அவர் சமீபத்தில் மனம் திறந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஒரு சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக உடல் எடை அதிகரித்ததாக கூறியிருக்கும் அவர், கடந்த 9 மாதங்களில் 12 கிலோ எடை குறைந்ததாக கூறியிருக்கிறார்.
இது எப்படி சாத்தியம்?
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் என்றாலும் டயட் இருப்பதும் முக்கியம். ரேஷ்மாவும் தான் ஜிம்மிற்கு செல்வது போல சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனால், இவர் ஜிம் செல்ல ஆரம்பித்ததற்கு பின்னால்தான், உடல் எடை குறைத்திருக்க முடியும் என பலர் கருதுகின்றனர். இத்துடன் சேர்ந்து அவர் டயட்டும் இருந்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் விடா முயற்சியுடன் 9 மாதங்கள் நம்பிக்கையுடன் முயற்சி எடுத்திருக்கிறார். இதற்கான பலன்தான் இவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் எந்த சீக்ரெட்டும் கூறவில்லை என்றாலும் இணையதளங்களில் தேடியதில் கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது.
இவரைப்போல உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
உடல் எடையை குறைக்க முதலில் அதற்கான டார்கெட்டை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு 9 மாதங்களில் 12 கிலோ எடை குறைய வேண்டுமென்றால், வாரத்திற்கு 0.3 கிலோ குறைக்க வேண்டும் என்ற கணக்கில், ஒரு மாதத்தில் 1.33 கிலோ குறைக்க வேண்டும் என ஃபிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். கொழுப்பை குறைக்க உயற்சி செய்து, சதையை பலப்படுத்தவும் ட்ரெயினிங் எடுக்கலாம்.
தினமும் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் எவ்வளவு கொழுப்பை கரைக்கிறோம் என்பதையும் தினமும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான டயட்:
புரதம் நிறைந்த சிக்கன், முட்டை, மீன், பருப்பு, பனீர் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் ஆற்றல் இருப்பை வைத்துக்கொள்ள முழு தானியங்கள், கினாவோ, பர்வுன் அரிசி, காய்கறி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்க நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய், அவோகேடோ ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
உடற்பயிற்சி:
வாரத்தில் 4-5 நாட்கள் நடைப்பயிற்சி, சைக்ளிங், ஏரோபிக் உடற்பயிற்சிகள் போன்ற உடற்பயிற்சிகளை 30-60 நிமிடங்கள் செய்யலாம்.
வாரத்தில் 2-3 நாட்கள் உடலை வலிமைப்படுத்தும் பயிற்சியினை (Strength Training) செய்ய வேண்டும்.
ஆக்டிவான வாழ்க்கை முறை:
ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வேலை செய்தால் படி ஏறுதல், உங்கள் வேலைகளை நீங்களே செய்தல் போன்ற விஷயங்களை செய்ய வேண்டும்.
நீர்ச்சத்து-தூக்கம்:
தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிகக் வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்னர் நன்றாக தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட்டால் பசி குறைவாக எடுக்கும்.
தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். சரியாக உறங்கவில்லை என்றால் உடல் எடையை குறைக்க முடியாது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ