சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
92 வயதான கருணாநிதி அவர்கள் ஊட்டசத்து மற்றும் நீரேற்று சம்மந்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாளர் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இன்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்-மந்திரி ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று திமுக தலைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.