Live: சட்டப்பேரவை நிகழ்வுகள்; திருப்பதி கூட்டநெரிசல்; பொங்கல் பரிசு விநியோகம் - உடனடி அப்டேட்ஸ்

Thu, 09 Jan 2025-9:21 pm,

Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (ஜன. 9) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Tamil Nadu Today Latest News Live Updates: 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6)  தொடங்கியது. சட்டப்பேரவை மரபுப்படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி வேண்டிய நிலையில், தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் அவமதிப்புக்கு உள்ளானதாக கூறி ஆளுநர், அரசு தயாரித்த அந்த உரையை வாசிக்க மறுத்து அவையில் இருந்து வெளியேறினார். தற்போது இந்த கூட்டத்தொடரின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று (ஜன. 9) நடைபெறுகிறது. இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை (TN Assembly 2025 Live Updates) இங்கு காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதியில் விஷ்ணு நிவாஸம் பகுதியில் வைகுண்ட ஏகாதேசியில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு இலவச டிக்கெட் விநியோகம் நேற்றிரவு நடைபெற்றது. இலவச டிக்கெட்டை வாங்க சுமார் 30 ஆயிரம் பேர் ஒரே வரிசையில் கூடியதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்ததால் திடீர் கூட்ட நெரிசல் (Tirupati Stampede) ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்த நிலையில், 6 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் அடக்கம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Andhra CM Chandrababu Naidu) இன்று திருப்பதிக்கு செல்ல உள்ளார். இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம். 


பொங்கல் 2025 பண்டிகையை (Pongal 2025) முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) ரேசன் கடைகள் மூலம் இன்று முதல் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. கூடவே, இலவச வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) இன்று காலையில் தொடங்கிவைக்கிறார். 


இவை மட்டுமின்றி உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (ஜன. 9) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Latest Updates

  • பெண்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!

    பெண்கள் 30 வயதிற்குப் பிறகு இந்த 5 கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். (முழு விவரம்)

  • கொழுப்பு கல்லீரல் இருப்பவர்களே குட்நியூஸ்

    உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருந்தால் பயப்பட வேண்டாம், இந்த 3 ஜூஸ் குடித்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். (முழு விவரம்)

  • பணம் காய்க்கும் மரமாகும் பரஸ்பர நிதியம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பரஸ்பர நிதிய முதலீடுகள் மூலம்  வருவாய் மிக சிறப்பாக உள்ளதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் அதை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அதிக வருமானம் பெற விரும்புபவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முறையில் முதலீடு செய்கிறார்கள். (மேலும் படிக்க)

     

  • உறங்கிய நாயை எழுப்பிய குரங்கு! வைரல் வீடியோ..

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    Funny Viral Video Of Monkey : இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியாேவில், ஒரு குரங்கு, உறங்கி கொண்டிருக்கும் நாயை விளையாட அழைக்கும் காட்சி வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

     

  • மத்திய அரசு சூப்பர்ஹிட் திட்டம்: 

    எல்ஐசி பீமா சகி திட்டம்: எல்ஐசியின் பீமா சகி திட்டம் மூலம் 18 முதல் 70 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பயன்பெற முடியும். (முழு விவரம்)

  • குழந்தை பாக்கியம் கொடுக்கும் புத்ரதா ஏகாதசி : 

    குழந்தை பாக்கியம் கொடுக்கும் புத்ரதா ஏகாதசி : நல்ல நேரம், விரத முறை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • ஆண்மை  பிரச்சனை தீர

    திருமண வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டினை கவனத்தில் கொள்வது அவசியம். குறிப்பிட்ட சில சிறப்பு உணவுகளை டயடில் சேர்ப்பதன் மூலம் ஆண்கள் உடல் வலிமை பெற்று, ஆண்மை பிரச்சனை நீங்கும். இது குறித்து விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்

  • Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?

    இம்முறை, புதிய வரி விதிப்பு முறையில் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், அவை யூசர் ஃப்ரெண்ட்லியாக, அதாவது 'பயனர்-நட்புடையதாக' இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள வர்க்கத்திற்கு நிவாரணம் கிடைக்குமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்

  • Uric Acid Control: யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான எளிய வழிகள்

    யூரிக் அமிலம் அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் மூட்டு வலி, கீல்வாதம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இயற்கையான வழிகளில் யூரிம் அமில அளவை குறைக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

  • காவு வாங்கும் திருப்பதி!! இது முதல் முறை இல்லை..

    Similar Incidents Like Tirupati Stampede: திருப்பதியில் தற்போது நடந்துள்ளது போல 17 வருடங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • EPF Withdrawal: விரைவில் புதிய விதிகள், நொடிகளில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்

    கூடிய விரைவில், அவசர காலங்களில் ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். இதை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

  • Side Effects of Eggs: இவர்கள் கண்டிப்பாக முட்டை சாப்பிடக்கூடாது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முட்டை சாப்பிடுவதும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக நாட்டின் பிரபலமான இதய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • PF கணக்கு முதலீடு

    EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பணியாளரின் அடிப்படைச் சம்பளத்தில் தலா 12% தொகையை EPF கணக்கில் செலுத்துகின்றனர். வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.50,000 சம்பளத்தில் ரூ.2.5 கோடி நிதி திரட்டலாம். முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

  • நவீன தீண்டாமை? நித்யா மேனனின் வைரல் வீடியோ..

    Viral Video Of Nithya Menen : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் செய்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)

  • Pongal 2025: காலங்களை கடந்த கலாச்சாரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த அறுவடை திருநாள் பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. இதன் முக்கியத்துவத்தை இங்கே காணலாம்.

     

  • பொங்கல் பரிசு தொகுப்பு 

    பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டு இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் கிடைக்காது. யாருக்கு கிடைக்காது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)

  • SBI Patrons scheme: மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச வட்டி

    SBI Patrons scheme என்றால் என்ன? இதனால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன? மூத்த குடிமக்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

  • சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, அனைத்து பெருமாள் ஆலயங்களிலும், சொர்க்கவாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த வாசல் வழியாகச் சென்று பகவான் விஷ்ணுவை வழிபட்டால், வாழ்வில் இம்மைகள் அணைந்தும் நீங்கி, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருநாளில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும் சில முக்கிய கோவில்கள் குறித்து இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

     

     

  • திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு

    Tirupati | திருப்பதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு யாரெல்லாம் செல்லக்கூடாது என்ற தகவலை மிக முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள். (முழு விவரம்)

  • ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

    சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படம், ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ளது. இதே போல இணைந்த வேறு சில தமிழ் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

  • நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி?

    Team India: இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலி நம்பர் 3 இடத்தை தியாகம் செய்ய  வேண்டும். அது ஏன் என்றும் அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். (மேலும் படிக்க)

  • Budget 2025: வரி விலக்கு, வரி அடுக்குகள், இபிஎஃப் வட்டி

    2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில், வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதிலும், இந்தியாவின் வரி முறையை எளிமைப்படுத்துவதிலும் பல வித சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர். 

  • விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கான எச்சரிக்கை

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களின் உடலில், அதீத சத்தம் மற்றும் மாசுபாடு, இதயத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • திருப்பதி கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு நிவாரணம்! 

    Relief Fund For Tirupati Stampede Victims Families : திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆந்திரா அரசாங்கம் நிவாரண நிதியை அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)

  • திருப்பதி சொர்க்க வாசல் அவ்வளவு முக்கியமா?

    Why Tirupati Vaikunta Ekadasi Darshan Is Famous? இந்தியாவின் முக்கிய கோவில் ஸ்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது, திருப்பதி. இங்கு, சொர்க்கவாசல் திறப்புக்கு டோக்கன் வாங்க, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. (மேலும் படிக்க)

  • திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பீதியை கிளப்பும் வீடியோ

    திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

  • பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் ‘இவர்’தான்!

    Bigg Boss 8 Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் டைட்டில் வெல்லப்போகிறவர் யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் பேசியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. (மேலும் படிக்க)

  • திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: லேட்டஸ்ட் அப்டேட்

    திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்புக்கு இலவச டிக்கெட் விற்பனையின்போது, 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து விரிவான தகவல் வெளியாகி உள்ளது. அதனை இங்கு அறிந்துகொள்ளலாம்

  • குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்

    2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு அதிக லாபம்? எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

  • அரசு ஊழியர்கள், ஒய்வுதியதாரர்களுக்கு அதிர்ச்சி: இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அரசு பிறப்பித்த உத்தரவு என்ன? இதற்கான அரசின் விதி என்ன? இதனால் ஓய்வூதியம் மற்றும்  கிராஜுவிட்டியில் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

     

  • Diabetes Control Tips: சுகர் லெவல் அதிகமா இருக்கா? தினமும் காலையில் இதை குடிங்க

    இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை தேநீரின் நன்மைகள் என்ன? அதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே காணலாம்.

  • Healthy Morning Drink: தினமும் காலையில் இந்த பானத்தை குடிக்கலாம்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வெல்லம் கலந்த சுடு தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. அவை குறித்து இங்கு கிளிக் செய்து படிக்கலாம். 

     

     

  • Pongal Gift | நாளை வங்கிக் கணக்கில் ரூ.1000?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பு இன்று முதல் ரேசன் கடைகள் மூல் விநியோகிக்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 ரொக்கம் அறிவிக்கப்படாத நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் ரூ.1000 நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்

     

  • Today Horoscope: இன்றைய ராசிபலன்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜன.9ஆம் தேதியான இன்று இந்த ராசிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அவர்கள் யார் யார், 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்னென்ன என்பதை இதை கிளிக் தெரிந்துகொள்ளுங்கள்.

     

  • Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் உள்ள ரேசன் கடையில், ரேஷன் அட்டைத்தாரர்களுக்கான பொங்கல் 2025 பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை விநியோகம் ஆகிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை (ஜன. 9) தொடங்கிவைக்கிறார். இதன் நேரலையை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பார்க்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link