திருப்பதி கோவில் சொர்க்கவாசல் அவ்வளவு முக்கியமா? இவ்வளவு கூட்டம் கூடுவது ஏன்?

Why Tirupati Vaikunta Ekadasi Darshan Is Famous? இந்தியாவின் முக்கிய கோவில் ஸ்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது, திருப்பதி. இங்கு, சொர்க்கவாசல் திறப்புக்கு டோக்கன் வாங்க, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 9, 2025, 12:04 PM IST
  • திருப்பதியில் உயிரிழந்த 6 பேர்!!
  • வைகுண்ட ஏகாதேசி முக்கியமா?
  • இவ்வளவு கூட்டம் கூடுவது ஏன்?
திருப்பதி கோவில் சொர்க்க வாசல் அவ்வளவு முக்கியமா? இவ்வளவு கூட்டம் கூடுவது ஏன்? title=

Why Tirupati Vaikunta Ekadasi Darshan Is Famous? திருப்பதி வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில், நாளை (ஜனவரி 10) வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. இந்த சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பேர் வந்து தரிசனம் செய்வதுண்டு. இந்த வருடம் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்புக்கு பொது தரிசன சிறப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதற்காக மொத்தம் 94 டிக்கெட் கவுன்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.

திருப்பதி சொர்க்க வாசல் அவ்வளவு முக்கியமா? 

திருப்பதிக்கு, அனைத்து நாட்களிலும், குறிப்பாக விடுமுறை அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் கூட்டம் கூடுவது வழக்கம். அதிலும் சொர்க்க வாசல் திறப்பிற்கு என்றால் எத்தனை லட்சம் பேர் வருவர் என்பதை கணிக்கவே முடியாது. இப்போது நடந்துள்ள கூட்ட நெரிசல்-உயிரிழப்பு சம்பவமும் அதற்கு சான்றாகவே உள்ளன. இந்த நிலையில், பலரது மனங்களில் “சாெர்க்க வாசல் அவ்வளவு முக்கியமா? இதற்கு இவ்வளவு கூட்டம் வருவது ஏன்?” என்பது பாேன்ற கேள்விகள் நிறைந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் இருந்தே திருப்பதியில் பிரம்மோத்ஸவ விழா 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில், வைகுண்ட ஏகாதேசி விழாவை, ஒரு நாளுக்கு மட்டும் ஆரம்பத்தில் கொண்டாடி வந்தனர். ஆனால், ஒரு நாள் விழாவிற்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் வரத்தொடங்கியதால் 1980-90களில் கோவில் நிர்வாகம் வைகுண்ட ஏகாதேசியை இரண்டு நாளாக திருப்பதி நிர்வாகம் நீட்டித்தது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாட்களும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. திருப்பதி கடவுளான வெங்கடேஸ்வரர், இந்த நாட்களில் தன்னை தரிசிப்பவர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்களை வழங்குவதாகவும், அப்படி தரிசிக்கும் பக்தர்கள், இறப்பிற்கு பின்னர் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பக்தர்கள் செய்யும் விஷயங்கள்!

பல ஆண்டு காலங்களாக, வைகுண்ட ஏகாதேசியில் திருப்பதிக்கு வந்து வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய, பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பது வழக்கமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, விரதம் இருகும் 41 நாட்களும் இவர்கள் மஞ்சள் துணிகளை கட்டி, காலணி அணியாமல் வெறும் காலுடன் கோவிலுக்கு செல்வார்களாம். ஒரு சிலர், தங்கள் சொந்த ஊரிலிருந்தே சொர்க்க வாசலுக்கு 10-12 நாட்கள் முன்னரே கிளம்பி, பாதை யாத்திரையாக நடந்து வந்து, தரிசனம் செய்வர்.

பக்தர்களின் இவ்வாறான வருகையை பார்த்த திருப்பதி நிர்வாகம், 2021-2022 காலக்கட்டத்தில் வைகுண்ட ஏகாதேசி மற்றும் துவாதசி பண்டிகைகளை 10 நாள் விழாவாக அறிவித்தது. இதன் பிறகு, வெங்கடேஸ்வரரின் உத்தார துவாரம் 10 நாட்கள் திறந்திருக்கும். கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே இவ்வாறு நாட்கள் அதிகரிக்கப்பட்டதாக, திருப்பதி நிர்வாகம் முன்னர் கூறியிருந்தது.

Tirupati

புராணங்கள் சொல்வது என்ன? 

புராணங்களின் படி, விஷ்ணு பகவான் வைகுண்டத்தில் தனது சீடர்களை குறிப்பிட்ட சில நாட்கள் சந்திப்பதாகவும், இந்த நாட்களில் விஷ்ணுவின் பக்தர்களும் அந்த சபையில் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு, வைகுண்டத்திற்கும், மனிதர்கள் வாழும் பூமிக்கும் இடையே 10 நாட்கள் நடக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இவ்வளவு கூட்டம் திருப்பதியில கூடுகிறது.

கூட்ட நெரிசல்-6 பேர் பலி, 40 பேர் படுகாயம்!

ஜனவரி, 10 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் திருப்பதி சொர்க்க வாசல் திறப்பின் இலவச தரிசனத்திற்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து ஜனவரி 9ஆம் தேதியான இன்று, காலை 5 மணி முதல் டிக்கெட் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் முதலில் டிக்கெட் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பல ஆயிரம் பேர் லைனில் காத்திருந்தனர்.

இதில் விஷ்ணு நிவாசம் எனும் பகுதியில் இருக்கும் ஒரு டிக்கெட் கவுன்டரில் மட்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதையடுத்து, நேற்று இரவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதை ஒட்டி, மக்கள் கூட்ட நெரிசலில் சிக்க தொடங்கினர். இதில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்திருக்கிறார். 

மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்

மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News