Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா?

Budget 2025: இம்முறை, புதிய வரி விதிப்பு முறையில் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், அவை யூசர் ஃப்ரெண்ட்லியாக, அதாவது 'பயனர்-நட்புடையதாக' இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2025, 06:35 PM IST
  • பழைய வரி முறைய நாடும் சம்பள வகுப்பினர்
  • தனிநபர் வரி விலக்குக்கான கோரிக்கை.
  • பிரிவு 80D இன் கீழ் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?
Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்குமா? title=

Union Budget 2025: 2025-26 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தாக்கல் செய்வார். வழக்கத்தை போலவே வருமான வரி தொடர்பான அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வரி செலுத்துவோர் தங்கள் நிதிச் சுமையை குறைக்கும் திட்டங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Budget 2025 Expectations: சம்பள வர்க்கத்திற்கு நிவாரணம் கிடைக்குமா?

பணவீக்கம் வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளது. இரண்டாவது காலாண்டில் குறைந்த ஜிடிபி வளர்ச்சியின் காரணமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நுகர்வோர் செலவினங்களில் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சம்பளம் பெறும் தனிநபர்கள் (Salaried Class) அதிகமாக சேமிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட வரி நிவாரண முயற்சிகளுக்கு வழி வகுக்கலாம். இதன் மூலம் அவர்களின் செலவழிப்பு வருவாய் அதிகரிக்கும். கையிருப்பு அதிகமாகும் போது வாங்கும் திறன் அதிகரித்து, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

New Tax Regime: புதிய வரிமுறையில் சீர்திருத்தங்கள்

இம்முறை, புதிய வரி விதிப்பு முறையில் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றும், அவை யூசர் ஃப்ரெண்ட்லியாக, அதாவது 'பயனர்-நட்புடையதாக' இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்தும் சம்பள வர்க்கத்தினர் தங்கள் வரிகளை சரியாக செலுத்துவதையும், வரி விதிகளுக்கு இணங்குவதையும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

Tax Relief: தனிநபர் வரி விலக்குக்கான கோரிக்கை

பெரும்பாலான தொழில் அமைப்புகள் அரசாங்கத்திடம் கணிசமான தனிநபர் வரி விலக்கை கோரி வருகின்றன. அவர்களுடன் சேர்ந்து, வரவிருக்கும் பட்ஜெட், சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் மீதான வரிச்சுமையைக் குறைப்பதில் கணிசமான கவனம் செலுத்தும் என்றும் நிபுணர்களும் நம்புகின்றனர்.

Confederation of Indian Industry

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான விளிம்பு வரி விகிதங்களைக் குறைப்பதில் இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக பிடிஐ அறிக்கை தெரிவிக்கின்றது. விளிம்பு வரி விகிதங்களைக் குறைப்பது அதிக நுகர்வுக்கு வழி வகுக்கும். இது வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது இறுதியில் அதிக வரி வருவாய்க்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

புதிய வரி முறையில் இவை எல்லாம் சேர்க்கப்படக்கூடும்

புதிய வரி முறையில் பல்வேறு மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி வரி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கான சில பரிந்துரைகளும் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

- வருமான விலக்கு வரம்பை ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்க ஒரு பரிந்துரை உள்ளது. 
- சம்பளம் பெறும் நபர்களுக்கான நிலையான விலக்கு தொகையை ரூ.75,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்துவதற்கான முன்மொழிவு மற்றொரு குறிப்பிடத்தக்க பரிந்துரையாக பார்க்கபடுகின்றது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமான வரம்புகளுக்கான சலுகை வரி விகிதங்களை மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
- இது அறிமுகப்படுத்தப்பட்டால், நடுத்தர வர்க்கத்தில் வருமான வரி செலுத்துவோருக்கு இது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும்.
- இதன் மூலம் புதிய வரி முறைக்கு மாறுவதற்கு அதிகமான மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | EPF Withdrawal: விரைவில் புதிய விதிகள், நொடிகளில் இபிஎஃப் தொகையை எடுக்கலாம்..... வரம்பு என்ன தெரியுமா?

Salaried Class: பழைய வரி முறைய நாடும் சம்பள வகுப்பினர்

பெரும்பாலான சம்பள வகுப்பினர் இன்னும் பாரம்பரிய வரி கட்டமைப்பையே விரும்புகின்றனர். ஏனெனில் பல வித வரி சலுகைகள் மற்றும் விலக்குகள் காரணமாக வரி செலுத்துவோரை ஈர்க்கிறது. பிரிவு 80C விலக்கு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்துவது மற்றும் பிரிவு 24(பி) இன் கீழ் வீட்டுக் கடன் வட்டி விலக்கு வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பது போன்ற மேம்பாடுகள் செய்யப்படக்கூடும் என வரி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Section 80D: பிரிவு 80D இன் கீழ் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

- பிரிவு 80D இன் கீழும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
- இதில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான அதிக விலக்குகள் மற்றும் பிரிவு 80DD இன் கீழ் ஊனமுற்றவர்களைச் சார்ந்துள்ள நபர்களுக்கு அதிகரித்த நிவாரணம் ஆகியவை அடங்கும். 
- இந்த மாற்றங்கள், பழைய வரி விதிப்பு முறையின் பலன்களை நம்பியிருக்கும் மக்களுக்கு, அது நடைமுறைத் தேர்வாகத் தொடர்வதை உறுதி செய்யும்.
- குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க, பள்ளிக் கட்டணம் அல்லது உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான விலக்குகள் போன்ற குடும்பத்தை மையமாகக் கொண்ட வரிச் சலுகைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | EPFO: ரூ.2.5 கோடி நிதி கார்பஸை உருவாக்க உதவும் PF கணக்கு முதலீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News