பெங்களூரில் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம்:-

Last Updated : May 18, 2016, 12:56 PM IST
பெங்களூரில் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம்:- title=

இந்தியாவில் ஆப்பிள் போன்களுக்கு மவுசு அதிகம். ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதை கணக்கில் கொண்டு ஆப்பில் நிறுவனம் பெங்களூரில் ஐ-போன் மேப்பிங் வசதி செய்வதற்கு வசதியாக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளன.

ஆப்பிள் வளர்ச்சி மையம் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறார். இந்தியா வந்த டிம் குக் இதை தெரிவித்தார். மேலும் அவர் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர அதிகாரிகள் சந்திக்க உள்ளார்.

மேலும் ஆப்பிள் வளர்ச்சி மையம் தொடங்குவது பற்றி முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பெங்களூரில் அமைக்கப்படும் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தை வரும் 2017ம் வருடத்திற்குள் திறக்கபடும் என தெரியவந்தது.

ஆப்பிள் வளர்ச்சி மையம் இந்தியாவில் தொடங்குவதால் ஆப்பில் வாடிக்கையாளர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

Trending News