போலி பாஸ்போர்ட் வழக்கில் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கு 7 வருட சிறை மற்றும் ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய நண்பரான சோட்டா ராஜனை இந்திய போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் இருந்த போது சோட்டா ராஜனை சர்வதேச போலீசார் கைது செய்து சிபிஐ போலீசாரிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்படைத்தனர். அவர் மீது டெல்லி, மும்பை பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.