காஷ்மீர் மாநிலம் பம்போர் பகுதியில் பஸ்சில் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் கூறியுள்ளன.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய 25-30 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.