PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்

EPFO New Rules: புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2024, 12:01 PM IST
  • பணியாளர் பங்களிப்பு வரம்பில் மாற்றம்.
  • ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதி.
  • ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது எளிதாகும்.
PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: EPFO புத்தாண்டில் அளிக்கப்போகும் 5 முத்தான பரிசுகள்

EPFO New Rules: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. EPFO அதன் சந்தாதாரர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான புதிய விதிகள்

இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம், PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அவர்களின் ஓய்வூதிய நிதியை சிறந்த முறையில் நிர்வகிப்பதும் ஆகும். இதன் மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களும் பயன்பெறுவார்கள். இந்தப் புதிய விதிகளைப் பற்றி விரிவாக காணலாம்.

EPFO New Rules 2025: 2025 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரக்கூடிய 5 முக்கிய மாற்றங்கள்

1. PF ATM Withdrawal: ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

EPFO சமீபத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. இப்போது அதன் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இபிஎஃப் தொகையை (EPF Amount) ஏடிஎம்மில் இருந்து நேரடியாக எடுக்க முடியும். இந்த வசதி ஜனவரி 2025 முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணம் எடுப்பதற்கான சிறப்பு அட்டை வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம், உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இருந்து நேரடியாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.

இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

- பிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும்.
- இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) நேரம் மிச்சமாகும்.
- பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

2. Change in EPF Contribution: பணியாளர் பங்களிப்பு வரம்பில் மாற்றம்

தற்போது, ​​பணியாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றனர். ஆனால் தற்போது இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. புதிய விதியின்படி, ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் 12%க்கும் அதிகமான தொகையை PF -க்கு அளிக்க முடியும்.

சாத்தியமான நன்மைகள் என்ன?

- ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும்.
= ஓய்வூதியம் அதிகரிக்கும்.
- சிறந்த முதலீட்டு விருப்பங்களைப் பெறுவீர்கள்

மேலும் படிக்க | இனி ஊதியக்குழுவே இல்லை, வருகிறது புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு அதிகமாகும் நன்மைகள்

3. EPFO IT System Upgrade: EPFO ​​இன் IT அமைப்பில் மேம்படுத்தல்

EPFO அதன் IT உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இது PF தொகையை க்ளெய்ம் செய்பவர்களும் பயனாளிகளும் தங்கள் வைப்புத்தொகையை குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் நன்மைகள் என்ன?

- க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும்.
- வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
- மோசடி வழக்குகள் குறையும்.

4. Facility To Invest in Equity: ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதி

EPFO அதன் உறுப்பினர்களுக்கு ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை சிறந்த முறையில் நிர்வகிக்க வாய்ப்பளிக்கும்.

இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள்:

- அதிக வருவாய் வரக்கூடும்.
- போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல்
- நீண்ட காலத்திற்கு சிறந்த வளர்ச்சி

5 Easy Pension withdrawal: ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது எளிதாகும்

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையை நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும், எந்த வங்கிக் கிளையிலிருந்தும் எடுக்க முடியும்.  இதற்காக அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவை இருக்காது.

இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?

- ஓய்வூதியம் பெறுவதில் அதிக வசதி
- நேரம் மிச்சமாகும்.
- எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தை எடுக்க சுதந்திரம் கிடைக்கும்.

மேலும் படிக்க | Budget 2025: மாநிலங்கள் நிதி அமைச்சரிடம் வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News