மீண்டும் நிதின் கட்கரி, கபில் சிபல்லிடம் மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித்திடம் மன்னிப்பு கேட்டார்.

Last Updated : Mar 20, 2018, 09:19 AM IST
மீண்டும் நிதின் கட்கரி, கபில் சிபல்லிடம் மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்! title=

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித்திடம் மன்னிப்பு கேட்டார்.

ஏற்கனவே, பஞ்சாப் மாநில அமைச்சர் பிக்ரம் மஜிதியாவிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டது, அம்மாநில ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து கெஜ்ரிவால் மீது மஜிதியா தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

அதேபோல, தன் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் அமைச்சர் கபில் சிபல் மற்றும் அவரது மகன் அமித் சிபலிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுள்ளார். போதிய ஆதாரமில்லாமல் இருவர் மீதும் தவறான குற்றச்சாட்டுகளை வைத்ததாக கெஜ்ரிவால் தனது மன்னிப்பு கடிதத்தில் கூறியிருந்தார். 

இதைத் தொடர்ந்து இருவரும் தங்களது அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Trending News