உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்?

Bloomberg Billionaires Index: ப்ளூம்பெர்க் பட்டியலில், முதல் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் (Elon Musk), 210 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.52 லட்சம் கோடி) சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2024, 06:49 PM IST
  • உலகின் முதல் 5 பணக்காரர்களில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.
  • முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் (Elon Musk), 210 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.52 லட்சம் கோடி) சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.
  • 9.43 லட்சம் கோடிக்கு உரிமையாளர் முகேஷ் அம்பானி.
உலகின் டாப் பணக்காரர்களில் எலோன் மஸ்க் நம்பர் 1: பட்டியலில் எவ்வளவு இந்தியர்கள்? title=

Bloomberg Billionaires Index: ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் உலகின் டாப் பணக்காரராக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ், பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் தற்போது பின்தங்கியுள்ளனர். முதல் 50 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் முகேஷ் அம்பானி 13வது இடத்திலும், கவுதம் அதானி 14வது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தவிர, ஷபூர் மிஸ்திரி, சாவித்ரி ஜிண்டால், ஷிவ் நாடார் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

உலகின் முதல் 5 பணக்காரர்களில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்

இந்த ப்ளூம்பெர்க் பட்டியலில், முதல் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் (Elon Musk), 210 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.52 லட்சம் கோடி) சொத்துக்களுக்கு சொந்தக்காரர். கடந்த 24 மணி நேரத்தில் அவரது சொத்து மதிப்பு $6.74 பில்லியன் அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), 207 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.27 லட்சம் கோடி) சொத்துக்கு உரிமையாளர் ஆவார். அவரது சொத்து $325 மில்லியன் அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தில் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) உள்ளார். பெர்னார்ட் 200 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.16.68 லட்சம் கோடி) சொந்தக்காரர். கடந்த 24 மணி நேரத்தில் அவரது சொத்து மதிப்பு $2.03 பில்லியன் அதிகரித்துள்ளது. 

இந்தப் பட்டியலில் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) நான்காவது இடத்தில் உள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் 180 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.15 லட்சம் கோடி) உரிமையாளர். கடந்த 24 மணி நேரத்தில் அவரது சொத்து மதிப்பு $828 மில்லியன் அதிகரித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள கணினி விஞ்ஞானி லாரி பேஜ் (Larry Page). 158 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.13.18 லட்சம் கோடி) சொந்தக்காரர். கடந்த 24 மணி நேரத்தில் அவரது சொத்து மதிப்பு $360 மில்லியன் அதிகரித்துள்ளது.

9.43 லட்சம் கோடிக்கு உரிமையாளர் முகேஷ் அம்பானி

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி (Mukesh Ambani) 13வது இடத்திலும், கவுதம் அதானி 14வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி 113 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.9.43 லட்சம் கோடி) உரிமையாளர் ஆவார். முகேஷ் அம்பானிக்கு அருகிலேயே கவுதம் அதானியும் (Gautam Adani)உள்ளார். கௌதம் அதானி 107 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8.93 லட்சம் கோடி) சொத்துக்கு சொந்தக்காரர்.

மேலும் படிக்க | Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோ

இந்த இந்தியர்களும் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்

ப்ளூம்பெர்க்கின் முதல் 50 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஷபூர் மிஸ்திரி (42வது இடம்), சாவித்ரி ஜிண்டால் (45வது இடம்), ஷிவ் நாடார் (47வது இடம்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஷபூர் மிஸ்திரிக்கு 38 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3.17 லட்சம் கோடி), சாவித்ரி ஜிண்டாலுக்கு 34.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 2.88 லட்சம் கோடி) மற்றும் ஷிவ் நாடாருக்கு 33.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 2.83 லட்சம் கோடி) மதிப்புமிக்க சொத்துகல் உள்ளன. 

டெஸ்லா பங்குகள் ஒரே நாளில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தன

எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 5.30 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டின. இந்நிறுவனத்தின் பங்குகளின் இந்த அதிகரிப்பு மஸ்க்கின் செல்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News