Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோ

Income Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2024, 03:50 PM IST
  • வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்?
  • அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
  • ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு புதிய வரி முறை நன்மை தரும்.
Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோ title=

Income Tax Regime: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 (Form 16) ஐ வழங்கியுள்ளன. இப்போது வரி செலுத்தும் சம்பள வகுப்பினர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். பல வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளனர். வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன. அதன்படி, வரி செலுத்துவோர் (Taxpayers) எந்த வரி முறை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் தங்களுக்கான வரி முறையை முடிவு செய்யலாம்.

2023 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன

நிதியமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2023 மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தார். அடிப்படை விலக்கு வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தினார். இது தவிர, பிரிவு 87A இன் கீழ் கிடைக்கும் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்கள் புதிய வரி முறையில் வரி செலுத்த தேவையில்லை. வரி கணக்கீடுகளை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கம்.

வரி சேமிப்பு மற்றும் அதன் பலன்கள் 

புதிய வரி முறை (New Tax Regime) மற்றும் பழைய வரி முறை (old Tax Regime) ஆகிய இரண்டில், எந்த வரி முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சில அளவுருக்களின் மூலம் முடிவு செய்யலாம் என்று வரி நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு, வரி செலுத்துபவர் தங்காளது சாத்தியமான வருமானம், சாத்தியமான விலக்குகள் மற்றும் கிடைக்கக்கூடிய விலக்குகளை பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக வரி சேமிப்பு அல்லது முதலீடு செய்யாதவர்களுக்கு புதிய வரி முறை பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், முதலீடு செய்யக்கூடியவர்களுக்கு பழைய வரி முறை சிறந்ததாக இருக்கும். 

மேலும் படிக்க | காஞ்சன்ஜங்கா ரயில் விபத்து எதிரொலி: இந்த 19 ரயில்களை ரத்து செய்தது இந்திய ரயில்வே!

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு புதிய வரி முறை நன்மை தரும்

ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு புதிய வரி முறை நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஏனெனில் இதில் அவர்களின் வரி பொறுப்பு பூஜ்ஜியமாகிறது. உங்கள் வருமானம் ரூ. 7 லட்சமாக இருந்து, நீங்கள் விலக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், புதிய வரி முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வரிச் சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் நல்ல முதலீடு செய்திருந்தால், பழைய வரி முறையே உங்களுக்குச் சரியாக இருக்கும். இது உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்கும். புதிய மற்றும் பழைய வரிக் கொள்கையின் முடிவு உங்கள் வரி சேமிப்பு முதலீடு (Tax Saving Investment) எவ்வளவு என்பதைப் பொறுத்து இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News