4.5 லட்சம் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு அறிவித்தது மத்திய அரசு!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனத்தின் 4.5 லட்சம் ஊழியர்களுக்கு நரேந்திர மோடி அரசு புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது. 

Last Updated : Dec 11, 2019, 05:19 PM IST
  • இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்ட பின்னர், 14-வது நிதி ஆணையத்தின் மானியத்தின்படி, 14,559.25 கோடி ரூபாய் மீதமுள்ள பங்கு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
  • கிடைத்த தகவல்களின்படி, இதில் ரூ.2,977.31 கோடி ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனங்களுக்கு ரூ.1,275.99 கோடியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
4.5 லட்சம் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு அறிவித்தது மத்திய அரசு! title=

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனத்தின் 4.5 லட்சம் ஊழியர்களுக்கு நரேந்திர மோடி அரசு புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது. 

முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்த அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் நன்மைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனத்தின் 4.5 ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.4,800 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாநிலத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசு முழுமையாக உறுதியளித்துள்ளது என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். கிஷன் ரெட்டியின் பதிலில் இந்த அறிவிப்பு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தெரிவிக்கையில்., குறித்த இந்த 4.5 லட்சம் ஊழியர்களுக்கு குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பனவு, விடுதி கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, LDC, நிலையான மருத்துவ கொடுப்பனவு வழங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு முன்னர் இந்த கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் இந்த ஊழியர்களுக்கு மத்திய அரசு தற்போது இந்த சலுகையினை அளிக்கும் வகையில் ரூ. 4,800 கோடி மதிப்பீடு செய்துள்ளது.

இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்ட பின்னர், 14-வது நிதி ஆணையத்தின் மானியத்தின்படி, 14,559.25 கோடி ரூபாய் மீதமுள்ள பங்கு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களில் பிரிக்கப்பட்டுள்ளது என்று ரெட்டி குறிப்பிட்டுள்ளார். கிடைத்த தகவல்களின்படி, இதில் ரூ.2,977.31 கோடி ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனங்களுக்கு ரூ.1,275.99 கோடியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக, மோடி தலைமையிலான பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து சட்ட பிரிவு 370 திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களா பிரித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஐம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் புதிய இரு யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது 28 மாநிலங்களும், ஒன்பது யூனியம் பிரதேசங்களும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News