பொதுவாக அரசு திட்டங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கான மிகப் பெரிய பம்பர் பரிசு எனக் கூறலாம். இனி வரி செலுத்துதல், பென்ஷன் பெறுதல் போன்ற பணிகள் மிகவும் எளிதாகும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு வர்த்தகம் மற்றும் திட்டங்களில் பங்கேற்க தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது என்றும், இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்களிலும் வர்த்தகத்திலும் ஈடுபடலாம் எனவும் கூறியுள்ளார்.
Embargo lifted on grant of Govt business to private banks. All banks can now participate. Private banks can now be equal partners in development of the Indian economy, furthering Govt's social sector initiatives, and enhancing customer convenience. @FinMinIndia @DFS_India
— NSitharamanOffice (@nsitharamanoffc) February 24, 2021
இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட அனைத்து வங்கிகளுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு தனியார் வங்கித் துறை நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதால், வங்கி வாடிக்கையாளர்களுகான சேவையின் தரமும் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் எனத் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அரசின் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றும் திட்டங்களை செயல்படுத்த தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு ரிசர்வ் வங்கி, இனி அங்கீகாரம் வழங்கலாம். மத்திய அரசு இது தொடர்பான முடிவை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சீர்திருத்தத்தை பல தனியார் வங்கிகள் வரவேற்றுள்ளன.
ALSO READ | வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR