Google 5-7 ஆண்டுகளில் இந்தியாவில் 75000 கோடி ரூபாய் முதலீடு செய்யும்-Sundar Pichai
பங்கு முதலீடுகள், கூட்டாண்மைகள் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் என பல துறைகளில் கூகுள் முதலீடு செய்ய விரும்புகிறது
புதுடெல்லி: அடுத்த 5-7 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக தொழில்நுட்ப நிறுவனம் Google திங்கட்கிழமையன்று அறிவித்தது.
Google for India virtual என்ற நிகழ்ச்சியில் இன்று பேசிய Google and Alphabet தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “இன்று, Google for India Digitization Fund என்ற நிதியத்தை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியின் மூலம், அடுத்த 5-7 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 10 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறோம். பங்கு முதலீடுகள், கூட்டாண்மைகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் என பல துறைகளில் முதலீடுகள் செய்யவிருக்கிறோம். இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் ”என்று அறிவித்தார்.
இந்தி, தமிழ், பஞ்சாபி என எந்தவொரு மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொரும், சொந்த மொழியில் அனைத்தையும் அணுகுவது மற்றும் தகவல்களை பெறுவது, கூறுவது என தொழில்நுட்பத்தை வாழ்க்கையின் இயல்பான ஓர் அங்கமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியமான நான்கு துறைகளில் முதலீடுகள் செய்வதில் கவனம் செலுத்துவதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கம்.
Read Also | Apple iPhone 12: புதிய மாடலின் விலை மற்றும் பிற விவரங்கள்!!
அடுத்ததாக, இந்தியாவின் பிரத்யேக தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, வணிகங்களை டிஜிட்டல் மூலமாக செய்வது மற்றும் தொழில்நுட்பத்தின் நன்மைகளை சமூக நலனுக்கான மேம்படுத்துவதும் இந்த அறிவிப்பின் மையக் கருத்தாக இருக்கிறது.
ஆன்லைன் தளத்தில் (online platform) இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்று கூறிய சுந்தர் பிச்சை, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா (Digital India) தொலைநோக்குத் திட்டத்தையும் பாராட்டினார்.
“டிஜிட்டல் இணைப்பின் வலுவான அடித்தளத்தினால் மட்டுமே இந்த முன்னேற்றம் சாத்தியமானது என்பதை உறுதியாக சொல்லலாம். டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி, ஆன்லைனில் ஒரு பில்லியன் இந்தியர்களைப் பெறுவதில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தரவுகளை மலிவு விலையில் கொடுப்பது, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது, உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவை புதிய வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளன” என்று Google and Alphabet CEO சுந்தர் பிச்சை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
Read Also | 11 ஆபத்தான செயலியை நீக்கிய Google.. உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அகற்றவும்
“2004ஆம் ஆண்டில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் Google தனது அலுவலகங்களைத் திறந்தது முதல், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு பங்காளியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அந்த தொடக்க நாட்களில், இந்திய பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பாலிவுட் நட்சத்திரம் அல்லது கிரிக்கெட் ஸ்கோர்களை தேடுவார்கள் என்பதன் அடிப்படையில் எங்கள் Search கட்டமைப்பில் கவனம் செலுத்தினோம். பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமான தகவல்களைக் கொடுப்பதில் எங்கள் கவனம் இருந்தது” என்று இந்தியாவில் கூகுளின் தொடக்க கால செயல்பாடுகள் பற்றி சுந்த பிச்சை நினைவு கூர்ந்தார்.
Internet Saathi போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளில் இணைய விழிப்புணர்வு பரவியதை நினைவு கூர்ந்த சுந்தர் பிச்சை, இந்தியா முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், தாங்கள் சார்ந்த சமூகங்களையும் மேம்படுத்த டிஜிட்டல் திறன்களைப் பெற இணையம் உதவியது என்பதையும் குறிப்பிட்டார்.