11 ஆபத்தான செயலியை நீக்கிய Google.. உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அகற்றவும்

11 மொபைல் பயன்பாடுகளை பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கம்.  பயனர்கள் இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 11, 2020, 03:20 PM IST
11 ஆபத்தான செயலியை நீக்கிய Google.. உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அகற்றவும்
Photo: Reuters

புது டெல்லி:  கூகுள் (Google) பயனர்களை மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 11 மொபைல் பயன்பாடுகளை அதன் பிளே ஸ்டோர்களில் (Play Store) இருந்து நீக்கியுள்ளது. இந்த பயன்பாடுகள் அனைத்தும் பிரபலமான Joker தீம்பொருள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கூகுள் அவற்றை 2017 ஆம் ஆண்டு முதல் கண்காணித்து வந்தது. 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஜோக்கர் தீம்பொருள் (Joker Malware) செயலிகள் புதிய வடிவத்தில் இருந்தது. இதன் சிறப்பு என்னவென்றால், ஹேக்கர்கள் அனுமதியின்றி, இந்த பயன்பாடுகள் மூலம் பிரீமியம் சேவைகளுக்கு பலரை ஒன்றாக இணைத்து வந்தது. அதில் பலர் சேர்க்கப்பட்டு பிரிமியம் செலுத்தி உள்ளனர். மேலும் பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள் : உலகில் அதிக வருமானம் ஈட்டும் Google CEO சுந்தர் பிச்சை.. அவருடைய மாத சம்பளம் என்ன?  

அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் கூகுளின் பிளே ஸ்டோர் (Google Play Store) பாதுகாப்புக்கு கட்டுப்படாமல்  இவ்வளவு காலமாகத் தவிர்த்து வருகின்றன. இருப்பினும் கூகுள் இப்போது அவற்றை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகிள் 1700 பயன்பாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அவை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பயன்பாடுகளில் ஜோக்கர் தீம்பொருளும் இடம் பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள் : பிளே ஸ்டோரிலிருந்து கூகிள் நீக்கிய 30+ ஆண்ட்ராய்டு செயலிகள்: ஏன் தெரியுமா? 

ஒரு செயலியை குறித்து சந்தேகம் இருக்கும்போது பயனர்கள் என்ன செய்ய வேண்டும்

பாதிக்கப்பட்ட பயன்பாடுகள் உங்கள் தொலைபேசியில் வந்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், சில முறையைப் பின்பற்றவும்.
உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகளை உடனடியாக நீக்கு.
பயன்பாடுகளுக்கான எந்தவொரு சந்தாவும் அனுமதியின்றி எடுக்கப்பட்டதா என்பதை உங்கள் டெபிட் மற்றும் மொபைல் பில் சரிபார்க்கவும்.
உங்கள் தொலைபேசியில் நம்பகமான பாதுகாப்பு பயன்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் : Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை 

11 பயன்பாடுகளின் முழு பட்டியல்
உங்களுக்காக அந்த பயன்பாடுகளின் பட்டியலை இங்கே பட்டியலிட்டு உள்ளோம். இந்த பயன்பாடுகள் ஏதேனும் உங்கள் தொலைபேசியில் இருந்தால், உடனடியாக அதை நீக்கவும்.

com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms (दो अलग-अलग रूप)
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame