இசை பிரியர்களை கவர, Youtube புதுதிட்டத்துடன் வருகிறது!

பிரபல ஆன்லைன் வீடியோ வலைதளமான Youtube விரைவில் Music Streaming சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: May 17, 2018, 12:23 PM IST
இசை பிரியர்களை கவர, Youtube புதுதிட்டத்துடன் வருகிறது!
Representational Image

பிரபல ஆன்லைன் வீடியோ வலைதளமான Youtube விரைவில் Music Streaming சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கூகிளின் Youtube ஆனது வரும் மே 22-ஆம் நாள் Music Streaming வசதியினை தனது வாடிக்கையாளர்களுக்கா அறிமுகம் செய்கிறது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களின் பட்டியலை உருவாக்கி இசைக்கலாம் என தெரிகிறது. இதனை விடவும் கூடுதலான வசதிகளுடன் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேயர்களுக்கு தேவையான இடைவெளியில் விளம்பரங்களை ஒளிப்பரப்பும் வசதியினை அறிமுகம் செய்தது. இதனையடுத்து தற்போது இந்த வசதியினை Youtube அறிமுகம் செய்கிறது.

தொலைக்காட்சிகளில் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வு பெற இடைவேளேகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் டிஜிட்டல் மீடியாக்களில் இவ்வாறு பெருவது சிரமம். எனவே இதற்கு ஏற்றவாரு இந்ந வசதியினை அறிமுகம் செய்தது. இதன்படி நேயர்கள் 15 நிமிடம் முதல் 180 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் விருப்பமான விளம்பவரங்களை பார்க இயலும்.

இந்த வசதியினை இயக்க நேயர்கள் தங்களது யூடியூப் கணக்கில் சென்று Settings - Remind me to take a break என்னும் வழியில் சென்று விருப்பமான நேர அளவினை தேர்வு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.