உங்களுக்கு நீளமான தலைமுடி வேண்டுமா? அப்படினா இத பன்னுங்க!!

தலைமுடி நீளமாக வளர இயற்கை நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது.

Last Updated : Jan 19, 2018, 05:08 PM IST
உங்களுக்கு நீளமான தலைமுடி வேண்டுமா? அப்படினா இத பன்னுங்க!! title=

தலைமுடி பிரச்சனை தான் உலகில் பலருக்கும் தலையாய பெரிய பிரச்சனையாக உள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களுமே தங்கள் தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பதில்லை.

இயற்கையே நமக்கு பல விடயங்களை தந்துள்ளது. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும்கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன.

ஒரு முடியின் பருமன் எவ்வளவு? ஒரு சர்வேயின்படி அது 50 மைக்ரான் முதல் 100 மைக்ரான் வரை இருக்கலாம்.

வயதாக ஆக முடியின் பருமன் குறைகிறது. சில மைக்ரான்கள் குறைவது பெரிய விஷயமல்ல என்றே தோன்றலாம். ஆனால், 1,00,000 முடிகள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே, ஒவ்வொரு முடியும் கொஞ்சம் அடர்த்தி குறைந்தாலும் மொத்த அடர்த்தி ரொம்பவே குறைந்துவிடும். எனவே நம்முடைய முடியை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்.

முடி உதிர்வதை தடுக்க:

தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும்.

வெந்தயம் மற்றும் குன்றிமணியை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒருவாரத்திற்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

பொடுகு வராமல் தடுக்க வேண்டுமா?

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது.

வேப்ப இலை மற்றும் துளசி இலையை பால்விட்டு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர பேன் மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நரைமுடி கருப்பாக வேண்டுமா? அப்படினா  கீரை முளைக்கீரையை அடிக்கடி சாப்பிடுங்கள். எண்ணெயுடன் நெல்லிக்கையை காயவைத்து, பவுடராக்கி, கலந்து தினமும் தேய்த்து வந்தால் இளநரை கருப்பாகும்.

முடி நீளமாக வளர வேண்டுமா? 

அரைத்த வெந்தயத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

5 மில்லி தண்ணீரில் அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துபின் குளிக்க முடி கருப்பாகி மினுமினுப்பாகும்.

வெளியில் செல்லும்போது காற்று மாசுபட்டிருப்பது, உப்பு நீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு, விதவிதமான ஹேர் டை ஆகியவற்றால் தலைமுடி உதிர்தல், இளநரை ஆகியவை உண்டாகின்றன.உடல் சூட்டின் காரணமாகவும் தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.

அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல அழகுக்கும் நல்லது.

Trending News