புதுடெல்லி: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) பயனாளிகள் இனி மருத்துவ ஆலோசனைக்காக அலைய வேண்டியதில்லை. ESIC (The Employees’ State Insurance Corporation) மருத்துவமனைகள் 10 கிலோமீட்டரை விட அதிக தொலைவில் இருந்தால், பயனாளிகள், பட்டியலிடப்பட்ட எந்த ஒரு மருத்துவமனைக்கும் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். ESIC இந்த வசதியைத் தொடங்கி விட்டது. இது தவிர, சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அதன் புதிய மருத்துவமனைகளின் செயல்பாட்டை தானே கவனிப்பதாகவும் ESIC முடிவு செய்துள்ளது.
ESIC ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தலைமையிலான 183 வது கூட்டத்தில் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்க தேவையான பல முடிவுகளை ESIC எடுத்தது.
ESIC தனது மருத்துவமனையை தானே நடத்துகிறது
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையை (Hospital) நடத்துவதற்கு மாநில அரசு வற்புறுத்தினால், அனைத்து புதிய மருத்துவமனைகளையும், எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து மருத்துவமனைகளையும் ESIC தானே நடத்தி நிர்வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருவரின் கோரிக்கைகளுக்குப் பிறகு ESIC இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் பயனாளிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்க முடியும் என ESIC நம்புகிறது.
ALSO READ: Life Insurance term plan ஏப்ரல் 1 முதல் 10 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும்: காரணம் இதுதான்!!
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம்
ESIC வசதிகள் இல்லாத 10 கி.மீ சுற்றளவில், பயனாளிகள் ESIC இலிருந்து எம்பனேஸ் செய்யப்பட்ட (பட்டியலிடப்பட்ட) எந்தவொரு தனியார் மருத்துவமனைக்கும் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறலாம் என்ற ஒரு பெரிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் ESIC மருத்துவமனை அல்லது மருந்தகத்திலிருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டிய அவசியமும் இருக்காது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உட்புற சிகிச்சை (Indoor Treatment) தேவைப்பட்டால், எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனை EIS இலிருந்து ஆன்லைன் அங்கீகாரத்தைப் பெறுகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிடி சேவைகளும் தொடங்கும்
மாரடைப்பு (Heart attack) போன்ற உடனடி மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ESIC வாரியம் தெரிவித்துள்ளது. மாரடைப்பு போன்ற நிலைமையில் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நோயாளியை ESIC மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது. இதை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருதயவியல், நெப்ராலஜி, சிறுநீரகம் மற்றும் புற்றுநோயியல் ஆகியவற்றில் சூப்பர் சிறப்பு சேவைகள் டெல்லி-என்.சி.ஆரில் உள்ள ஒரு சில ESIC மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும். இதன் பின்னர் கட்டம் கட்டமாக இவை மீதமுள்ள ESIC மருத்துவமனைகளுக்கும் நீட்டிக்கப்படும்.
ESIC பங்குதாரர்கள் அவசர காலங்களில் சிகிச்சைக்காக (Treatment) பேனலில் உள்ள அல்லது பிற தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம். பேனலில் உள்ள மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை இருக்கும். எனினும், பிற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவுகளை பயனர்கள் முதலில் செலுத்திவிட்டு, பின்னர், அதை திரும்பப் பெற முடியும். அதன் சிகிச்சை கட்டணங்கள், அரசு சுகாதார சேவை (CGHS) கட்டணங்களுக்கு ஏற்ப இருக்கும்.
ALSO READ: சுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR