# வசிகர முகம் பெறுவது எப்படி!!!

-

Updated: Aug 12, 2017, 01:37 PM IST
# வசிகர முகம் பெறுவது எப்படி!!!
Zee Media Bureau

இயற்கையான குணநலன்கள் :-

முகம் பெண்களுக்கு ஒவ்வொரு நிறம், வடிவம், அழகு என்ற முறையில் உள்ளன. முகம் எப்படி இருந்தாலும் அதை எப்படி வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.

வெயிலில் சென்று விட்டு வரும்போதெல்லாம் முகத்தை குளிர்ந்த நீரில் கஸ்தூரி மஞ்சள்  போட்டு கழுவ வேண்டும். ஏன்றால் வெளியில் படியும் தூசி, கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிரிகளை அழித்து முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவும்.

குளிர்ந்த இடத்தில் வேலை செய்பவருக்கு அடிக்கடி முகம்  உலர்ந்து அல்லது வறண்டு போகும் பொது கிளிசரின் அல்லது பேபி லோஷன் போன்றவற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவோடு இருக்கும். 

கடலைமாவு, மூலிகை பவுடர் முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.  அதிக மணம் நிறைந்த பவுடர், சோப்பு, கீரிம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

முகத்திற்கு பொலிவு தருவதற்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக, வைட்டமின் சி  நீறைந்த நெல்லிக்காய், பாதம் பருப்பு , ஆரஞ்சு, பெர்பெரி, சாத்துக்குடி, எலுமிச்சை, கொய்யா போன்ற உணவுக்களை உட்கொள்வது நல்லது.

முக்கியமாக சாத்துக்குடிப்  பழத்தை இரண்டக கட் செய்து அதில் உள்ள கொட்டையை நீக்கி முகத்தில் அரைமணிநேரம் மாசாஜ் செய்த பிறகு கஸ்துரி மஞ்சள் கொண்டு பேஸ்-பேக் போட்டு கழிவினால் முகம் பொலிவு பெரும். இதை மாதம் இருமுறை செய்துக்கொள்ளலாம்.

முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள அலர்ஜி தரும் பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சிலருக்கு ஹேர் டை அடித்தாலோ, புதிதாக மேக்கப் போட்டாலோ அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படாமல் பார்த்து கொண்டால் முகம் அழகாக இருக்கும்.