2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா?

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரெயா பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா வதேரா காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார? விரைவில் அறிவிப்பு என ஆதாரங்கள் கூறுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 3, 2018, 08:04 PM IST
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா? title=

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரெயா பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா வதேரா காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார? விரைவில் அறிவிப்பு என ஆதாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் பெரிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராய் பரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா வத்ரா மாற்றப்படலாம் என தகவல் வந்துள்ளது.

ஏஎன்ஐ தகவல் படி, அமேதி தொகுதியில் நான்காவது முறையாக ராகுல்காந்தி போட்டியிடுவார் என்பதற்க்கான உறுதியான் ஆதாரங்கள் உள்ளன். அவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். பின்னர் 2009 மற்றும் 2014 தேர்தல்களிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

அமேதி தொகுதி நேரு-காந்தி அரசியல் குடும்பத்தின் பகுதியாக கருதப்படுகிறது. இந்த குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் தங்கள் அரசியல் வாழ்வை அமேதியில் தொடங்கியுள்ளனர். எமர்ஜென்சி காலத்தில் ராகுலின் மாமா சஞ்சய் காந்தி முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் 1980-ல் வெற்றி பெற்றார். அவரது இறப்புக்குப் பிறகு, ராகுலின் தந்தை, ராஜீவ் காந்தி 1981, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிக்கு வந்தார். ராஜீவ் காந்தி படுகொலை செய்வதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டும் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். 

அதன்பிறகு அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியின் மனைவியும், முன்னால் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி 1999 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தன் மகன் ராகுல் காந்திக்காக அமேதி தொகுதியை விட்டுகொடுத்து, அவர் ராய் பரேலி தொகுதியில் போட்டியிட்டு 2004, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இப்பொழுது வரை அந்த தொகுதி சோனியா காந்தியிடம் தான் இருக்கிறது.

சோனியா காந்திக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினமா செய்துவிட்டு, அந்த பதவிக்கு தன் மகன் ராகுல் காந்திக்கு வழங்கினார். தற்போது தான் போட்டியிட்டு வந்த ராய் பரேலி தொகுதியில் தனக்கு பதிலாக தன் மகள் பிரியங்கா வத்ராவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன என ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

Trending News