பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் வேண்டாம்!

Last Updated : Jul 24, 2017, 12:40 PM IST
பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் வேண்டாம்! title=

கடந்த வாரம் பார்லிமென்டில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை பற்றி கேள்விகள் எழுப்பின. இதற்கு பதிலளித்த மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதில்:-

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தால் போதும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.

புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் 8 வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10% சலுகை அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.

திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Trending News