பெங்களூரில் உள்ள ராஜ் பவனில் பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்!!
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.
இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமையும் வரை முதல்வராக பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இன்றைய தினமே பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து, தற்போது ஆபெங்களூரில் உள்ள ராஜ் பவனில் கர்நாடகாவின் 19 வது முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். இவருக்கு கர்நாடகா ஆளுநர் வஜுனுபாய்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Karnataka: BJP State President BS Yediyurappa takes oath as Chief Minister at Raj Bhavan in Bengaluru. pic.twitter.com/5tEFE8GnHN
— ANI (@ANI) July 26, 2019