புதுடில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே, அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை, இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேச உள்ளார். சிவசேனா (Shiv Sena) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) இணைந்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைத்தால், வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து மகாராஷ்டிரா அரசியலின் அடுத்தக் கட்ட நகர்வை குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பு இன்று மலை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
288 தொகுதிகளில் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் அக்டோபர் 24, 2019 அன்று வெளியானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். அப்படி பார்த்தால், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து சிவசேனா-பாஜக கூட்டணி மொத்தம் 161 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதில் சிவசேனா 56 இடங்களில் வெற்றியும், 105 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த கூட்டணியின் வெற்றிக்கு பிறகு சிவசேனாவும் மற்றும் பிஜேபி இடையே ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு மற்றும் முதலமைச்சர் பதவி தொடர்பான இருகட்சிகளுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளில் ஒருமித்த கருத்து ஏற்படததால், சிவசேனா கட்சி, என்சிபி கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இதன்மூலம் மாநிலத்தில் 19 நாள் நீடித்த வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
அதேபோல மறுபுறத்தில் 54 உறுப்பினர்களைக் கொண்ட என்.சி.பி மற்றும் 44-எம்.எல்.ஏ கொண்ட காங்கிரஸையும் சேர்த்து, 7 சுயேச்சைகளின் ஆதரவும் சிவசேனா கட்சிக்கு கிடைப்பதால், இந்த கூட்டணியில் மொத்தம் 161 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இதனால் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் சிவசேனா (Shiv Sena) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) கூட்டணிக்கு கிடைக்கும். இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க உள்ளது.
சிவசேனா தனது கட்சியை சேர்ந்தவரை மகாராஷ்டிராவின் முதல்வராகக் கொண்டு வருவதில் பிடிவாதமாக உள்ளது, இந்த கோரிக்கையை பாஜக வெளிப்படையாக நிராகரித்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தனிக்கட்சியாக மிகப் பெரிய வெற்றியை பெற்ற என்ற பெயரில் முதலமைச்சர் பதவியை ஐந்து ஆண்டுகள் பெறுவதற்கான உரிமை எங்கள் கட்சிக்கு உண்டு என்றும், சிவசேனாவுடன் இந்த பதவிக்கு 50:50 சூத்திரத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பாஜக தலைமை சுட்டிக் காட்டியுள்ளது.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி எவ்வளவு வெற்றிகளை பெற்றது என்பதை பார்ப்போம்!!