மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக கன மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாங்கள் வங்கி கடன் பெற்றிருந்தோம், இப்போது அதை எப்படி திருப்பிச் செலுத்துவோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றனர்.
மேலும் அவர்கள், எங்கள் குடும்பமே விவசாயத்தை நம்பி தான் இருக்கிறது.விவசாயத்திற்கு தேவையான விதை, தண்ணீர் உட்பட பல பொருட்களை நாங்கள் விலை கொடுத்து தான் வாங்கி வருகிறோம். இப்போது பயிர்கள் சேதமடைந்துள்ளதால் என்ன செய்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை என்றும் சுமார் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#MadhyaPradesh: Unseasonal rain & hailstorm damaged crops in Bhopal, farmers say 'We are so tensed now. We don't know what to do. We had taken a lot of loans now we don't know how will we repay that.' pic.twitter.com/dPJLIweGHL
— ANI (@ANI) February 14, 2018
எனவே, அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.