டெல்லி, NCR-ல் காற்றின் தரம் சற்று மேம்பட்டது; எனினும்...

டெல்லியில் காற்றின் தரம் செவ்வாயன்று சற்று மேம்பட்டது, என்றபோதிலும் காற்றின் தரக் குறியீடு (AQI) 411-ஆக பதிவு செய்யப்பட்டதால் 'கடுமையான' தரத்தில் நீடிக்கிறது.

Written by - Mukesh M | Last Updated : Nov 5, 2019, 08:40 AM IST
டெல்லி, NCR-ல் காற்றின் தரம் சற்று மேம்பட்டது; எனினும்... title=

டெல்லியில் காற்றின் தரம் செவ்வாயன்று சற்று மேம்பட்டது, என்றபோதிலும் காற்றின் தரக் குறியீடு (AQI) 411-ஆக பதிவு செய்யப்பட்டதால் 'கடுமையான' தரத்தில் நீடிக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகம், IIT-டெல்லி மற்றும் சாந்தினி சௌக் ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில், AQI முறையே 510, 415 மற்றும் 410 என பதிவு செய்யப்பட்டது (அனைத்தும் 'கடுமையான' பிரிவின் கீழ்). பூசா சாலை, லோதி சாலை மற்றும் மதுரா சாலை ஆகியவற்றில், காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவின் கீழ் பதிவாகியுள்ளது. 

காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் தெரிவுநிலை சுமார் 1,000 மீட்டர் என பதிவாகியுள்ளது.

அதேவேளையில் குருகிராம் மற்றும் நொய்டாவில் உள்ள AQI-யும் சற்று மேம்பட்டது, ஆனால் முறையே 493, 405 என்ற இடத்தில் 'கடுமையான' பிரிவிலேயே நீடிக்கிறது.

AQI புள்ளிகளை பொருத்தவரையில்., 301 முதல் 400 வரையிலான AQI 'மிகவும் மோசமான' பிரிவில் விழும், 400-க்கு மேல் உள்ள AQI 'கடுமையான' பிரிவின் கீழ் தகுதி பெறுகிறது, மேலும் 500-க்கு மேல் 'கடுமையான-அவசரநிலை' வகையாகும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.

மையத்தால் இயங்கும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) வழங்கிய தரவுகளின்படி, முக்கிய மாசுபடுத்திகள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை முறையே 411 மற்றும் 310 என டெல்லியில் நறுக்கப்பட்டன, நொய்டாவில் PM2.5 493-ஆகவும் PM10 458-ஆகவும் பதிவாகியுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி-NCR-ன் நிலைமை மிகவும் மோசமடைந்தது, ஏனெனில் ஒரு தடிமனான புகை மூட்டம் நாள் முழுவதும் நகர் முழுவதும் மூழ்கியது. 

இதற்கிடையில், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசுபாடு பிரச்சினைக்கு நிரந்தர நீண்டகால தீர்வு காண பிரதமர் அலுவலகம் திங்களன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. மறுஆய்வுக் கூட்டத்தில், பிரதமரின் முதன்மை செயலாளர் PK மிஸ்ரா, குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், நிரந்தர நீண்டகால தீர்வுக்கு ஒரு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் மிஸ்ரா வலியுறுத்தினார். உடனடி நடவடிக்கைக்கு ஒரு பொறிமுறையை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கூட்டத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியிடமிருந்து தகவல்கள் கோரினர். மேலும் புதிய தீ மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகளை சரிபார்க்கவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துனர்.

Trending News