திருடிகளுக்கு உதவிய தலைமை கான்ஸ்டபிள் சிக்கினார்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடிகளுக்கு உதவிசெய்த போலீஸ் கான்ஸ்டபிள் சிசிடிவி கேமராவில் சிக்கினார்.

Last Updated : Dec 28, 2016, 12:12 PM IST
திருடிகளுக்கு உதவிய தலைமை கான்ஸ்டபிள் சிக்கினார் title=

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடிகளுக்கு உதவிசெய்த போலீஸ் கான்ஸ்டபிள் சிசிடிவி கேமராவில் சிக்கினார்.

டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்கள் கூட்டத்திற்கு போலீஸ் கான்ஸ்டபிள் உதவிசெய்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர் கொள்ளை கும்பலிடம் ஏதே ஒரு பொருளை வாங்கி வைத்துக்கொள்ளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றாலா வந்த அமெரிக்க பெண் தன்னுடைய நகைகள் மற்றும் உயர் மதிப்புடைய பிற பொருட்கள் திருட்டு போய்விட்டது என்று புகார் கொடுத்தது தொடர்பாக திருட்டு தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கூட்டத்தை போலீஸ் கைது செய்தது. 

ரயிலில் அமெரிக்க பெண் தன்னுடைய கணவருடன் செல்பி எடுத்த போது இருபெண்கள் அவர்களுக்கு பின்னால் நின்று உள்ளனர். அவர்களும் அந்த செல்பி புகைப்படத்தில் வந்து உள்ளனர். இதனை கொண்டு போலீஸ் விசாரணை செய்தபோது இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். 

இரு பெண்களும் 6 பெண்கள் அடங்கிய கும்பலில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கும்பலிடம் இருந்தே போலீஸ் கான்ஸ்டபிள் மர்ம பொருளை வாங்கி பைக்குள் வைக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. 

விசாரணையை அடுத்து டெல்லி போலீஸ் மெட்ரோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள சிஐஎஸ்எப்பிடம் கூடுதல் சிசிடிவி காட்சிகளை கேட்டுக் கொண்டு உள்ளது. இதுபோன்ற திருட்டு கும்பல்களுக்கு கான்ஸ்டபிள் உதவினாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மூத்த கான்ஸ்டபிள் உதவி செய்யப்பட்டு உள்ளார். சிசிடிவி காட்சியில் அவருடைய முகமானது தெளிவாக இடம்பெறவில்லை. அவர் சந்தேகத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டு உள்ளோர், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று டெல்லி போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். 

டிசம்பர் 13-ம் தேதி 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் இருந்து 22 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

வீடியோவை பார்க்கவும்:-

Trending News