Drug Scandal: நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது

போதைப்பொருள் விவகாரத்தில்  நடிகர் ராணாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை, அவரது வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகளையும் விசாரிக்கிறது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2021, 01:19 PM IST
  • பாகுபலி பிரபலம் நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
  • ஹைதராபாதில் அதிகாரிகளிடம் ராணா விளக்கம்
  • போதைப்பொருள் விவகாரத்தில் ராணா உட்பட 12 பிரபலங்களிடம் விசாரணை
Drug Scandal: நடிகர் ராணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது title=

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றவர். ராணா உட்பட நவ்தீப், ரவிதேஜா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி கவும், ரகுல் ப்ரீத் சிங் என 12 பேர் மீது போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. 

2017ம் ஆண்டு போடப்பட்ட போதைப்பொருள் வழக்கு அமலாக்கத்துறையின் வசம் உள்ளது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை, தற்போது நடிகர் ராணவிடம் விசாரணை நடத்திவருகிறது.

முன்னதாக, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் போதைப்பொருள் மட்டுமல்ல, பண மோசடியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் ராணா, ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Also Read | பிறந்தநாள் வாழ்த்துக்களால் நெகிழ்ந்த மம்முட்டியின் அன்பான நன்றி

தற்போது நடிகர் ராணாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அமலாக்கத்துறை, அவரது வங்கி பண பரிமாற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக அவரை அழைத்துள்ளது.

போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது தெலுங்கானா கலால் அமலாக்க சிறப்புப் புலனாய்வு குழுவினர் (Telangana Excise Enforcement SIT) வழக்கு தொடுத்துள்ளது. போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை (chargesheets) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திரையுலகைச் சேர்ந்த யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

READ ALSO | வீட்டிலிருந்தே மம்முட்டியை இயக்கிய துல்கர் சல்மான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News