டெல்லி வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சந்திப்பு
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது மகனுடன் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்துள்ளார். இவர் இந்தியாவில் நடந்து வரும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்ஷே, கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் விடுதலை புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்றும் தமிழர்களுக்கு எதிரானது இல்லை என்றும் கூறினார்.
மேலும் இலங்கை ராணுவத்தின் மீது சர்வதேச நாடுகள் முன்வைக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று ராஜபக்ஷே கூறினார். இறுதிகட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்ததாக தவறான செய்தி பரப்பப்படுவதாகவும், ஆனால் உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 8000 பேர் மட்டுமே என்றும் கூறினார். மேலும், இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்திற்கான போர் இல்லை என்றும், தீவிரவாதத்திற்கான போர் மட்டுமே என்றும் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
Former President of Sri Lanka Mahinda Rajapaksa met Former Prime Minister Manmohan Singh, Congress President Rahul Gandhi and party leader Anand Sharma in Delhi today. pic.twitter.com/i1SGaiWNZc
— ANI (@ANI) September 13, 2018
இதையடுத்து, தற்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார்.