நவம்பர் மாத இறுதியில், ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் (GES) பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவான்கா இந்தியா வருகைபுரிந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து போது அவர், ஹைதராபார் நிஜாம் அரண்மனையில் தங்கவைத்து கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியாவை விடைப்பெற்று சென்ற அவர் தற்போது தனது பயணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நன்றி தெரிவிக்கும் வகையினில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இவான்கா ஒரு அமெரிக்க தொழிலதிபர், முன்னாள் பேஷன் மாடல் மற்றும் அவரது தந்தையின் உதவியாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
#IvankaTrump pens down letter to Telangana Chief Minister K Chandrashekhar Rao, thanks him for his warm hospitality during her Hyderabad visit last month pic.twitter.com/ff87bJKXmL
— ANI (@ANI) December 18, 2017
பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது விடுத்த அழைப்பின் பேரில் அவர் ஹைதராபாத்தில் நடைப்பெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதி குழு சார்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது!