ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. வாக்கு எண்ணிக்கையில் துவக்கத்தில் ஆளும் பாஜக பின்தங்கியது. தற்போது இந்த எண்ணிக்கையில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
Jharkhand: Counting of votes for all 81 assembly constituencies of the state is underway. Visuals from a counting centre in Ranchi. #JharkhandAssemblyPolls pic.twitter.com/vgKdjvWSzH
— ANI (@ANI) December 23, 2019
காலை 9 மணிக்கு பிறகு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பாஜக 37 தொகுதிகளிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.
கடந்த தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்தது.
இந்நிலையில் தற்போதைய நிலவரம் படி பாஜக கட்சி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது மேலும் 7 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
Official Election Commission trends for 78 seats: BJP leading on 29 seats, JMM on 23, Congress on 11, RJD on 5, JVM (P) on 4, AJSU and BSP on 2 each & CPI (ML) on 1 seat. #JharkhandAssemblyPolls pic.twitter.com/X1CeceNniV
— ANI (@ANI) December 23, 2019
Official Election Commission trends for 68 seats: BJP leading on 22 seats, JMM on 21, Congress on 10, RJD on 5, JVM (P) on 4, AJSU and BSP on 2 each & CPI (ML) on 1 seat. #JharkhandAssemblyPolls pic.twitter.com/ttoZzhIjkL
— ANI (@ANI) December 23, 2019
Official Election Commission trends for 62 seats: BJP leading on 22 seats, Congress on 9, JMM on 19, RJD on 5, AJSU and BSP on 2 seats each, CPI (ML) and JVM (P) on 1 seat each. #JharkhandAssemblyPolls pic.twitter.com/EMtmIMLibS
— ANI (@ANI) December 23, 2019
Jharkhand results: BJP leading on 11 seats, Congress on 7
Read @ANI story | https://t.co/bMDpDUK4Zp pic.twitter.com/a5S6lQGlTj
— ANI Digital (@ani_digital) December 23, 2019