Live Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள், IND vs AUS டெஸ்ட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Live Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள், இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் அப்டேட் உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்
Live Election Results 2024: Maharashtra and Jharkhand Updates INDIA vs NDA : Live Today Election Results மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பரபரப்பாக நடக்கிறது. ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகள்
Latest Updates
- டிசம்பர் மாத ராசி பலன்!
- தனுஷ் - சிம்பு!
- ஏஆர் ரகுமான் நோட்டீஸ்!
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் மலர்கிறதா?
Watch Video: எஸ்.பி.வேலுமணி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
விண்டரில் ஆரோக்கியமாய் இருக்க டிப்ஸ்
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் இவைதான்: அற்புதமான ஆரோக்கியம் கேரண்டி
அறிவாளியாக ஒரு அசத்தலான டிப்ஸ்
ரயிலை பிடிக்க ஓடலாம்..ரயில் மேலையே ஓடலாமா?
ஒரு சிறுமி, ரயிலின் மீது ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
அவதூறு கருத்துக்கு எதிராக ஏ ஆர் ரகுமான் நோட்டீஸ்
தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களும் கட்டுரைகளும் வீடியோக்களும் வெளியிட்ட சமூக வலைதளங்கள், youtube பதிவர்கள் மற்றும் வலைதள நிறுவனங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சார்பில் நோட்டீஸ்
ஒட்டுமொத்த முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை' -சிவசேனாவின் (யுபிடி) ஆதித்யா தாக்கரே
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024: மும்பையின் வொர்லி தொகுதியை வெற்றி பெற்ற சிவசேனாவின் (UBT) ஆதித்யா தாக்கரே, வொர்லி தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்க எண்ணும் மையத்தை அடைந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்தத் தொகுதி மற்றும் மாநிலத்தில் உள்ள மற்ற இடங்களை வெல்ல எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை. இதே மகாராஷ்டிரா மே மாதம் மக்களவைத் தேர்தலின் போது வித்தியாசமாக வாக்களித்தனர்" என்றார்.
மத்திய அரசின் 2 குட் நியூஸ்
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: மத்திய அரசின் 1 எச்சரிக்கை, 2 குட் நியூஸ்
ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்?
ஆண்கள்-பெண்களில் நல்ல தூக்கத்தை பெறுவதை யார் என்ற ஆய்வு ஒன்று, சமீபத்தில் நடந்துள்ளது.
கேரளா வயநாடு தேர்தல் முடிவுகள் 2024: பிரியங்கா காந்தி வெற்றி
கேரளாவின் வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை காலி செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா வேட்பாளராக களம் இறங்கினார். முதல் முறையாக தேர்தல் அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக இதயங்கள் வைத்திருக்கும் 8 விலங்குகள்!!
அதிக இதயங்கள் வைத்திருக்கும் விலங்குகள் பல்வேறு வகைகளில் இருக்கிறது.
ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
"மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதிலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன்" என்று தனது X தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024: கட்சி வாரியான முன்னிலை பட்டியல்
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மகாராஷ்டிராவில் இந்திய கூட்டணிக்கு எதிராக வெற்றிபெற உள்ளது.
பாஜக+ : 229
காங்கிரஸ்+ : 50
சுயேச்கைகள்: 2
மற்றவை: 7
மகாராஷ்டிராவில் வெற்றி குறித்து பிரதமர் மோடி
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) செயல்திறன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார், அவர், "என்டிஏவின் மக்கள் சார்பு முயற்சிகள் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கின்றன" என்றார்.
சஞ்சய் ராவத்தின் ‘ஈவிஎம் மோசடி’ குற்றச்சாட்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் பதில்
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ரவுத்தின் ‘EVM மோசடி’ குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிலளித்தார். மேலும் மக்கள் தங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதை நான் ஒப்புக்கொள்கிறேன், அது மிகவும் நியாயமான முறையில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருந்தன. இதனால் ஜார்க்கண்டில் ஜனநாயகம் நிலவுகிறது எனட்ராஎன்றால், மறுபுறம், மகாராஷ்டிராவில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளோம் என்றால், ECI ஒரு சார்புடையதாகிவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள். இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சியினர் கூறுகிறார்கள். இது எப்படி நியாமாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் முடிவுகள் 2024: எந்த சிவசேனா உண்மையான சேனா? ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மகாயுதியின் அமோக வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே , யார் உண்மையான சிவசேனா மற்றும் என்சிபி என்று பதிலளித்தார். யார் உண்மையானவர்? யார் போலி? என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் சிவசேனாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ஷிண்டே கூறினார்.
உங்கள் குழந்தைகள் படிப்பதை மறக்காமல் இருக்க இதை செய்யுங்கள்!!
அதிகாரிகளின் செயலால் சாமி ஆடிய பெண்கள்
Watch Video: அம்மன் சிலை அகற்றம், மக்கள் கொந்தளிப்பு - பதற்றம்!
வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொண்டால் பெண்ணிற்கு நன்மை!
கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர்கள்: பதற வைக்கும் சிசிடிவி காட்சி
Watch Video: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி, தூக்கி வீசப்பட்ட முதியவர்கள்
வெயிட் லாஸ் செய்ய சுலபமான வழி
தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க
காப்பீட்டில் சிக்கல் வரமால் இருக்க இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க!!
- இக்கட்டான நிலையில் இந்திய அணி!
காதலில் விழுந்த த்ரிஷா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
CGHS: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு AB PM-JAY குறித்த முக்கிய அப்டேட்
தங்க மோதிரம்.. தவெக தலைவர் விஜய்
தவெக மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி, பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஒப்பந்ததாரர் விஸ்வநாதன் ஆகியோருக்கு தங்க மோதிரம் வழங்கி கௌரவித்தார் விஜய்.
- ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா?
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024:
ஜார்க்கண்டின் 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ 24 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. ஜேஎம்எம் 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆர்ஜேடி (RJD) 5 இடங்களிலும், சிபிஐ (CPI(ML)(L) இரண்டிலும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21 இடங்களிலும், AJSUP, LJP(RV), JD(U) ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா நிறுவனர் ஜெய்ராம் மஹதோ தும்ரி தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024: சித்தராமையாவை பாராட்டிய டி.கே.சிவக்குமார்
கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், முதல்வர் சித்தராமையாவின் தலைமைக்கும், சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான ஐந்து உத்தரவாதங்களையும் வழங்கினார்.
பிரச்சனைகளை தீர்க்க ‘இந்த’ 7 புத்தகங்கள் உதவும்!!
- சிறந்த சுற்றுலா தளங்கள்!
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஜேஎம்எம் தொண்டர்களுடன் கல்பனா சோரன் கொண்டாட்டம்
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் நிலையில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
நிச்சயமாக என் மகன் தான் அடுத்த முதல்வராக வருவார்
நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் இருப்பதாகப தரவுகள் காட்டுகின்றன. இந்நிலையில் அவரது தாயார் சரிதா ஃபட்னாவிஸ், தனது மகன் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குரு பெயர்ச்சி 2025: இவர்களுக்கு ஜாக்பாட்
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் பணம், புகழ் அனைத்திலும் வெற்றி
IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு வரலாற்று அவமானம்
IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கு வரலாற்று அவமானம், டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை
மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்துக்கள் -நிதின் கட்கரி
மஹாயுதி மகத்தான வெற்றியை நெருங்கும் நிலையில் பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை தினத்தைக் கொண்டாடிய உலகின் உயரமான பெண் மற்றும் குட்டை பெண்!!
யார் இந்த ஹேமந்த் சோரன்?
ஷிண்டே, பவார், ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு அமித் ஷா வாழ்த்து
2024 சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை நெருங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.
மஹாயுதி கூட்டணி பெரும்பான்மையை தாண்டி, மதியம் 1:00 மணி நிலவரப்படி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்தது. பாஜகவின் மும்பை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். ஷிண்டே மற்றும் ஃபட்னாவிஸின் வீடுகளுக்கு இனிப்புகள் கொண்டு செல்லப்பட்டன.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவருடனும் மாலை 3 மணிக்கு வர்ஷாவில் செய்தியாளர்களை சந்திக்ககிறார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர நாரிமன் பாயின்ட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் கொண்டாட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்கிறார்.
- பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
- ஜீப்ரா திரைவிமர்சனம்!
உ.பி.யில் 9 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வெற்றி அடையும் -உ.பி துணை முதல்வர் நம்பிக்கை
உ.பி.யில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெறும்; மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது' என உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறினார்
உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது குறித்து நம்பிக்கை தெரிவித்ததோடு, மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என்றார். மேலும் மகாராஷ்டிராவில் பாஜக-கூட்டணி அமோக பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாகவும், அவர்கள் மகாயுத்திக்கு வாக்களித்துள்ளதாகவும் பிரஜேஷ் பதக் கூறினார்.
EPFO முக்கிய அப்டேட்:
ஆதார் OTP மூலம் EPFO UAN -ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ
முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் - திருமாவளவன் பேச்சு!
மேற்கு வங்காள இடைத்தேர்தல் முடிவுகள் 2024: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் சீதை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பாளர் சங்கீதா ராய் 1.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காவல் நிலையத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அனிருத், லோகி?!
- லைன் மேன் திரைவிமர்சனம்!
தேர்தல் முடிவுகள் 2024 ஜார்கண்ட்-மகாராஷ்டிராவின் சமீபத்திய நிலைமை என்ன?
மகாராஷ்டிராவில் இதுவரை வெளியான நிலவரப்படி, பாஜக கூட்டணி 219 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மறுபுறம், ஜார்க்கண்டில், ஜேஎம்எம் கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?
இந்த வெற்றி நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஒன்றரை மணி நேரம் கழித்து, மூன்று கட்சிகளும் அமர்ந்து எதிர்கால உத்தி என்ன என்பதை முடிவு செய்யும். அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவோம் என்றார்.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? இதோ ஒரு சூப்பர் சான்ஸ்!!
இடைத்தேர்தல் முடிவுகள் 2024: பிரியங்கா காந்தி 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
கேரளாவின் வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மூன்று மணி நேரம் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் வேட்பாளர் பிரியங்கா காந்தி வத்ரா இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின்படி, காலை 11.23 மணி நிலவரப்படி, பிரியங்கா 3,17,983 வாக்குகளும், எல்.டி.எஃப்-ன் சத்யன் மொகேரி 1,08,810 வாக்குகளுடன் இரண்டாவது இடமும், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 60,692 வாக்குகளுடன் மூன்றாவது இடமும் பெற்றனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024: தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
மகாராஷ்டிரா 2024 தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மாநிலத்தில் உள்ள 288 இடங்களில் 215 இடங்களில் மகாயுதி முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிர துணை முதல்வரும், நாக்பூர் தென்மேற்கு பாஜக வேட்பாளருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது தொகுதியில் 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் முடிவுகள் 2024: நாளை மகாயுதியின் சட்டமன்றக் கட்சி கூட்டம்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கிடையில், மகாயுதி நாளை சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் நவம்பர் 25 ஆம் தேதி தேர்வு செய்யப்படுகிறார். 26-ம் தேதி ஆட்சி அமைப்பதற்கு மகா கூட்டணி உரிமை கோரும்.
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் 2024
கர்நாடகாவில் மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. சன்னபட்னா, ஷிகாவ்ன், சண்டூர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
வெற்றியாளர்களின் 7 மாலை நேர பழக்கங்கள்!!
"மோடி கி கியாரண்டி' மக்கள் வாக்களித்தனர்: ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர்
ராஜஸ்தான் பாஜக தலைவரான மதன் ரத்தோர், பல இடைத்தேர்தல் தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், "மோடி கி கேரண்டி" என்று பாராட்டினார்.
"மோடி கி கியாரண்டி' என்ற நிலையில் எல்லா இடங்களிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். 'மோடியின் உத்தரவாதம்' என்று ரத்தோர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..மீண்டும் உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை !!
பீகார் இடைத்தேர்தல் முடிவுகள் 2024: பாஜக 4 இடங்களில் முன்னிலை
பீகாரில் தராரி, ராம்கர், இமாம்கஞ்ச் மற்றும் பெலகஞ்ச் ஆகிய நான்கு இடைத்தேர்தல் தொகுதிகள் வாக்கு எண்ணப்பட்டு வருகின்றன. நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பின்தங்கியிருப்பது பற்றி காங்கிரஸ் என்ன கூறியது?
காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநெட் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான நாள் இன்று இல்லை. முடிவுகள் நமக்கு சாதகமாக அமையவில்லை. மகாராஷ்டிராவில் நாங்கள் நல்ல பிரச்சாரம் செய்தோம். மகாராஷ்டிராவின் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக உள்ளன. ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
2024-ன் நம்பர் 1 நாயகன்!
கேரளா பாலக்காடு இடைத்தேர்தல் முடிவுகள்
பாலக்காடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் மம்கூடத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளது
மகாராஷ்டிராவில் பாஜக 127 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சிவசேனா (ஷிண்டே) 55 இடங்களிலும், என்சிபி (அஜித் பவார்) 35 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 20 இடங்களிலும், சிவசேனா (உத்தவ்) 16 இடங்களிலும், என்சிபி (சரத் பவார்) 13 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
பாஜகவின் ஸ்ட்ரைக் ரேட் - 84%
என்சிபி (அஜித் பவார்) ஸ்ட்ரைக் ரேட் - 62%
சிவசேனா (ஷிண்டே) ஸ்ட்ரைக் ரேட் - 71%
காங்கிரஸ் ஸ்ட்ரைக் ரேட் - 19%
சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஸ்ட்ரைக் ரேட் - 21%
என்சிபி (சரத் பவார்) ஸ்ட்ரைக் ரேட் - 12தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் என்ன சொல்கிறது?
உத்தியோகபூர்வ தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, JMM தலைமையிலான மகா கூட்டணி மாநிலத்தில் பெரும்பான்மையை தாண்டியுள்ளது. அவர்கள் தற்போது 81 இடங்களில் 51 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
முழங்கால் வலி டிப்ஸ்
முழங்கால் வலி கடுமையாக இந்த தப்பை செய்யவே கூடாது..!
இது வரை நடக்காதது மகாராஷ்டிரா - ஜார்கண்டில் நடந்தது.
இதுவரை நடக்காதது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக வரலாறு படைத்துள்ள நிலையில், ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் 24 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்துள்ளார்.
முதலில் மகாராஷ்டிராவைப் பற்றி பேசலாம். இங்கு பாஜக இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 126 இடங்கள் கிடைக்கும். இதற்கு முன் 2014ல் 122 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்டில் 24 ஆண்டுகால பாரம்பரியத்தை முறியடித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்கிறார்.
செரிமானம் முதல் நினைவாற்றல் வரை மேம்படுத்த டிப்ஸ்
இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ
தேர்தல் முடிவுகள் 2024: ஜார்கண்டில் கடும் போட்டி நிலவுகிறது
மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையிலும், தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாவிகாஸ் அகாடி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 37 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:
தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, NDA கூட்டணி 215 இல் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா - 125, சிவசேனா - 55, தேசியவாத காங்கிரஸ் - 35 முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024 நேரலை: இது நோட்டு இயந்திரத்தின் வேலை -சஞ்சய் ராவத்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாடி பின்தங்கியிருப்பது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ஏதோ தவறு நடந்துள்ளது. இது மக்களின் கருத்து அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இரண்டு நாட்களுக்கு முன் அதானிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் பாஜகவின் முழு ரகசியமும் அம்பலமானது. அதில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இதெல்லாம் செய்யப்பட்டு உள்ளது. கௌதம் அதானியின் பாக்கெட்டுக்குள் மும்பை போகிறது. மகாராஷ்டிர மக்களின் மனநிலை எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு தொகுதியிலும் நோட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார்.
தேர்தல் முடிவுகள் 2024 நேரலை: ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றது
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் காட்சி மாறிவிட்டது. ஜேஎம்எம் கூட்டணி மீண்டும் பெரும்பான்மையை கடந்துள்ளது. இங்கு பாஜக கூட்டணி 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜேஎம்எம் கூட்டணி 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக இதுவரை இல்லாத சாதனையை எட்டியுள்ளது
மகாராஷ்டிராவில் பாஜக 131 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 48 இடங்களிலும், என்சிபி (அஜித் பவார்) 31 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் காங்கிரஸ் 35 இடங்களிலும், சிவசேனா (உத்தவ்) 20 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி 10 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
மகாராஷ்டிராவில் முக்கிய மைல்கல்லை கடந்த மஹாயுதி
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி ஆரம்ப போக்குகளில் முக்கிய மைல்கல்லை கடந்தது. ஆளும் கூட்டணி 170 இடங்களிலும், எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி 85 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உ.பி., பீகார், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் 2024:
15 மாநிலங்களில் உள்ள 48 சட்டசபை தொகுதிகள் உட்பட 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த 48 இடங்களில் ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் உ.பி.யின் 9 இடங்கள் மீதுதான் உள்ளது. இது தவிர, பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடும் வயநாடு தொகுதியின் முடிவுகள் குறித்தும் அதிக ஆர்வம் உள்ளது. ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பஞ்சாப் மற்றும் பீகாரில் தலா 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா 3 இடங்களுக்கும், உத்தரகாண்டின் கேதார்நாத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
பிக்பாஸ் 8: இந்த வார எலிமினேஷன் யார்?
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
பர்ஹெய்த் சட்டமன்றத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 2,812 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலையில் உள்ளார்.
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024
முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் செரைகேலா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். கோல்ஹான் பகுதியில் அமைந்துள்ள செரைகேலா என்ற முக்கியமான தொகுதியில் பாஜக வேட்பாளர் சம்பாய் சோரன் முன்னிலையில் உள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் 2024
பாஜக மிகப்பெரிய கட்சி அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. மொத்த தொகுதிகளின் மஹாயுதி கூட்டணி பாதியை தாண்டியதால், மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது. சரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) கட்சியும், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணியும் 2வது இடத்துக்கான போட்டியில் உள்ளன.
பெரும்பான்மையை நோக்கி மஹாயுதி கூட்டணி
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மையை கடந்துவிட்டது. தற்போது 172 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான எம்விஏ 72 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
IND vs AUS : ஆஸ்திரேலியா ஆல்வுட்
பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆல்வுட். இதனால் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார்.
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி முன்னிலை
மகாராஷ்டிரா, ஜார்கண்டின் அடுத்த முதல்வர் யார்?
Election Results 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை
மகளிர் உரிமைத் தொகை அரசு முக்கிய அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் இவர்களுக்கு மட்டும் சிறப்புரிமை - அரசு முக்கிய அப்டேட்
ரேஷன் அட்டைதார ர்களுக்கு குட் நியூஸ்....!
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன், நவம்பர் 23, சனிக்கிழமை : நல்ல தொடக்கம், அதிர்ஷ்டம், நிதி வரவு இருக்கும் நாள்
8வது ஊதியக்குழு: பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?
186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ