ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்? ரிப்போர்ட்!

Men Vs Women Who Is Sleeping Better : ஆண்கள்-பெண்களில் நல்ல தூக்கத்தை பெறுவதை யார் என்ற ஆய்வு ஒன்று, சமீபத்தில் நடந்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 23, 2024, 05:40 PM IST
  • ஆண்கள் vs பெண்கள்: நன்றாக தூங்குவது யார்?
  • ஆராய்ச்சி முடிவுகள் என்ன?
  • ஹார்மோன்கள் பெரும் பங்கு வகிக்கின்றன
ஆண்கள் vs பெண்கள்: இருவரில் நன்றாக தூங்குவது யார்? ரிப்போர்ட்! title=

Men Vs Women Who Is Sleeping Better : பெண்ணோ, ஆணோ, மனிதராக பிறந்த அணைத்து உயிரினங்களுக்குமே தூக்கம் என்பது முக்கியமான விஷயம். மனிதனால், ஒரு நாள் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்து விட முடியும். ஆனால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பது தூக்கத்திடம் மட்டுமே உள்ளது. இந்த தூக்கம் சரியாக இல்லை என்றால், உடலின் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வுடன் காணப்படுவோம். மனிதர்கள், தினசரி 7-8 மணி நேரம் உறங்க வேண்டும் எனக்கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால், நம்மால் தினமும் 5 மணி நேரம் கூட சரியாக உறங்க முடிவதில்லை. இப்படி, தூக்கம் குறித்த ஒரு ஆய்வுதான் சமீபத்தில் நடதப்பட்டிருக்கிறது. ஆண்கள்-பெண்கள் இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிகம் உறங்குவது யார் தெரியுமா? 

ஆய்வு:

சி.யு பௌல்டர் என்பவர், சமீபத்தில் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். பல ஆண்டுகளாக உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி ஆண்களை வைத்தே நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆய்வு அதற்கு சற்று மாறாக இடம் பெற்றிருக்கிறது. ஆண்கள்-பெண்கள் இருவரையும் வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தூக்கம் எப்படி இரு பாலினரின் உடல் நலனையும் மாற்றுகிறது என்பதை கண்டறிந்திருக்கின்றனர். 

ஒருங்கிணைந்த உடலியல் உதவி பேராசியர், ரேச்சல் ரோவ். இவர் இது குறித்து பேசுகையில், "மனிதர்களில், ஆண்களும் பெண்களும் தனித்துவமான தூக்க முறைகளை பின்பற்றுகின்றனர். இது பெரும்பாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுகிறது. இந்த ஆராய்ச்சியில் இருந்து வந்த ரிசல்ட்களை வைத்து பார்க்கும் போது இதற்கு உயிரியல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ரிசல்ட் என்ன? 

இந்த ஆய்வில், பெண்களை விட ஆண்கள் அதிகமாக உறங்குவதாக தெரிய வந்திருக்கிறது. தூக்கத்திற்கு ஹார்மோன் மாற்றங்களும் பெரிய காரணமாக இருக்கிறதாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவான நேரம் மட்டுமே உறங்குகின்றனராம். இதனால்தான் அவர்களுக்கு மிக எளிதாக உடல் எடை அதிகரித்தல், உடல் உடனே சோர்வுறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

நல்ல தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் நன்றாக உறங்குவதற்கு ஏற்ற மெத்தையை தயார் செய்ய வேண்டும். உறங்கும் அறை மிகவும் குளிராகவும் இல்லாமல், சூடாகவும் இல்லாமல் மிதமான டெம்பரேச்சரில் இருக்க வேண்டும். அதிக சத்தம் இல்லாத அறையில் தூங்க வேண்டும். 

தூக்க நேரம்:

இரவு பத்து மணிக்கு உறங்க செல்ல வேண்டும் என்றால், சரியாக அந்த நேரத்தில் படுத்துவிட வேண்டும். பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க | தூக்கம் உங்கள் கண்களை தழுவ... ‘இந்த‘ தவறுகளை செய்யாதீங்க...

டிஜிட்டல் சாதனங்கள்:

உறங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு டிஜிட்டல் சாதனங்களை ஓரம் கட்டிவிட வேண்டும். இதில் இருந்து வரும் ப்ளூ ரேஸ் பல சமயங்களில் உங்களை தூங்க விடாமல் செய்து விடலாம். 

டயட்:

இரவில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மது குடிப்பது, அதிக நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது உங்கள் உடல் நலனை கெடுப்பதுடன் தூக்கத்திற்கும் ஆப்பு வைத்துவிடும். 

மன அழுத்தம்:

யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்து மன அழுத்தத்தை சரி செய்ய வழியை பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | அதிகாலை 3-5 மணிக்குள் தூக்கம் கலைகிறதா? முக்கிய காரணங்கள் - உஷார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News