Nagaland Election Result 2023: தற்போது நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜககூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதாவது கடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், தேசிய மக்கள் கட்சியும் இணைந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. அதேபோல இந்த முறையும் பா.ஜ.க-வும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் இணைந்தே தேர்தலை எதிர்கொண்டன. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் தனித்துக் களம் கண்டது.
60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில், அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மாநிலத்தில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 இடங்கள் தேவை.