Big Rule Changes From January 1, 2025: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது பல புதிய விதிகள் அமலுக்கு வருவது வழக்கம். புதிய ஆண்டின் துவக்கம் இன்னும் விசேஷமானது. 2025 புத்தாண்டிலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, கார் விலைகள், ஓய்வூதிய விதிகள், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், UPI 123Pay விதிகள் மற்றும் எஃப்டி விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஜனவரி 2025 முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் (14.2 கிலோ) விலையில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.58 டாலராக இருப்பதால், ஜனவரி தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2. Car Prices: கார் விலை உயர்வு
புதிய ஆண்டில் கார் வாங்குவதற்கு அதிக பணம் செலவழிக்க வெண்டி வரலாம். ஜனவரி 1, 2025 முதல், Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, Mercedes-Benz, Audi மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்தும். உற்பத்திச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால், கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், இனி அதற்காக அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
3. EPFO Pension Withdrawal: ஓய்வூதியம் பெறுவதில் மாற்றங்கள்
ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு நிம்மதி அளிக்கும் வகையில் அமையும். ஜனவரி 1, 2025 முதல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியம் திரும்பப் பெறுவதற்கான விதிகளை எளிதாக்கியுள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது. இந்த வசதி ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) பெரும் நிவாரணத்தை அளிக்கும்.
4. Amazon Prime membership: அமேசான் பிரைம் உறுப்பினருக்கான புதிய விதிகள்
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். புதிய விதிகளின்படி, பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். யாராவது மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தா எடுக்க வேண்டும். முன்னர் பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
5. Fixed Deposit Rules: நிலையான வைப்பு (FD) விதிகள்
NBFC -கள் மற்றும் HFC -களுக்கான நிலையான வைப்பு தொடர்பான விதிகளை RBI மாற்றியுள்ளது. புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சில விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை எடுத்துக்கொள்வது, லிக்விட் அசெட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் வைப்புகளை காப்பீடு செய்வது போன்ற மாற்றங்கள் இதில் அடங்கும்.
6. UPI 123 Pay இன் புதிய பரிவர்த்தனை வரம்பு
ஃபீச்சர் போன் பயனர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிமுகப்படுத்திய UPI 123Pay சேவையில் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சேவையின் கீழ் அதிகபட்சமாக ரூ.5,000 வரை பரிவர்த்தனை செய்ய வரம்பு இருந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு விரைவில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ