ஒரே நேரத்தில் ஜார்க்கண்ட் - கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 4.0 மற்றும் 4.7 என்ற லேசான நிலநடுக்கம் கர்நாடகா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஹம்பி மற்றும் ஜாம்ஷெட்பூர் மாவட்டங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை தாக்கியது.

Last Updated : Jun 5, 2020, 08:35 AM IST
    1. 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜாம்ஷெட்பூரில் உணரப்பட்டது
    2. ஹம்பியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது
ஒரே நேரத்தில் ஜார்க்கண்ட் - கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் title=

புதுடெல்லி: கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் உள்ள ஹம்பி மற்றும் ஜாம்ஷெட்பூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை இரண்டு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6:55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடும் ஜாம்ஷெட்பூரில் ஏற்பட்டது;  அதே நேரத்தில் கர்நாடகாவில் உள்ள ஹம்பி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.0 நிலநடுக்கம் ஏற்பட்டது.

READ | கடந்த இரண்டு மாதங்களில் டெல்லியில் 6 முறை நிலநடுக்கம்...ஏன்? வெளியான தகவல்

இந்த நடுக்கம் பீதியால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை

Trending News