மகள் இறந்து போனது தெரியாமல் 4 நாட்கள் பிணத்துடன் தூங்கிய தாய்

உயிரிழந்த ரூபாவின் தாய் நாகம்மா, மகள் இறந்ததை யாரிடமும் சொல்லாமல் சடலத்தின் அருகில் 4 நாட்கள் கழித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2022, 04:21 PM IST
  • கள் இறந்தது தெரியாமல் சடலத்துடன் 4 நாட்களாக வீட்டில் தங்கியிருந்தார் தாய்.
  • ரூபாவும், தாய் நாகம்மாவும் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் வலுத்தது.
மகள் இறந்து போனது தெரியாமல் 4 நாட்கள் பிணத்துடன் தூங்கிய தாய் title=

கர்நாடக மாநிலம் மாண்டியா, ஹல்லஹள்ளி பகுதி புதிய தமிழ் காலனியில் வசித்து வருபவர் ரூபா (32) கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகள் இறந்தது தெரியாமல் சடலத்துடன் 4 நாட்களாக வீட்டில் தங்கியிருந்தார் தாய். உயிரிழந்த ரூபாவின் தாய் நாகம்மா, மகள் இறந்ததை யாரிடமும் சொல்லாமல் சடலத்தின் அருகில் 4 நாட்கள் கழித்தார்.

துர்நாற்றம் அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர் . மேலும் ரூபாவும் அவருடைய தாய் நாகம் மாவும் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால்  சந்தேகம் வலுத்தது.

மேலும் படிக்க | பள்ளி மாணவி கடத்தல் - 10 நாட்களாகியும் மாணவியை கண்டுபிடிப்பதில் சிக்கல்

மேலும் கதவு சாத்தப்பட்ட நிலையில், எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்படாததைக் கண்டு அப்பகுதி மக்கள் திடுக்கிட்டனர். பின்னர் அனைவரும் சேர்த்து கதவை திறந்து. ஊர் மக்கள் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சடலத்தின் அருகே நாகம்மா படுத்திருப்பதைக் கண்டனர்.

அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் இதுகுறித்து  காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
கிழக்கு மாண்டியா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூபா இறப்புக்கான காரணம் தற்போது தெரியவில்லை.

மேலும் படிக்க | தண்டனை வழங்கிய பெண் உயர் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு - இளநிலை உதவியாளர் கைது

தாய் மன நலன் பாதிக்கப்பட்டிருந்தாரா, என்ன நடந்தது என தெரியாத நிலையில், போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  மகள் இறந்தது தெரியாமல் தாய் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் தயாராகி ராணுவம் செல்லும் துப்பாக்கிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News