முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் ஒத்திவைப்பு!!

முத்தலாக் தடை மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி மற்றும் ஒ பிரையன் இடையே ஏற்ப்பட்ட கடும் வாதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  

Last Updated : Jan 4, 2018, 06:49 PM IST
முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் ஒத்திவைப்பு!! title=

முத்தலாக் தடை மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி மற்றும் ஒ பிரையன் இடையே கடும் வாதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த முதலாக் முறையால் பாதிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள் காவல் துறையினரை அணுக முடியாமலும், தண்டனைக்கான விதிகள் இல்லாததால் தவறு செய்யும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவை தயாரித்தது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையை பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் குளிர்கால கூட்டத்தொடரில் ‘முத்தலாக் தடை மசோதா’ நிறைவேற்றியது மத்திய அரசு. ‘முத்தலாக் தடை சட்டம்’  முழு வடிவம் பெற டெல்லி மேல் சபையில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

முன்னதாக நேற்று முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல் சபையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது, ஆனால், இந்த மசோதா இன்று டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து தற்போது,மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்ற போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒ பிரையன் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது. காங்கிரஸ் செயலால் இஸ்லாமிய பெண்கள் தொடர்ந்து அநீதியை எதிர்க்கொள்ள வேண்டியது உள்ளது, எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலைபாடு தெரியவந்து உள்ளது என பா.ஜனதா குற்றம் சாட்டிவருகிறது.

மத்திய அரசு இரட்டை நிலைபாடு கொண்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒ பிரையன் பேசுகையில், பெண்களுக்கு அதிகாரத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக உள்ளன, ஆனால் மத்திய அரசின் நிலைபாடு வெளிப்பட்டு உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

அதற்கு ஆவேசமாக பதிலுரைத்த ஸ்மிருதி இரானி, முற்றிலும் தவறானது, இப்போது நீங்கள் பெண்களுக்கு அதிகாரத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், இப்போதே முடிவை எடுங்கள் என்றார். 

அதை தொடர்ந்து இன்றும் மாநிலங்களவை முத்தலாக் தடை மசோதா தொடர்பாக எந்த ஒரு முடிவும் இன்றி அமளியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending News