PM India portal: புதுப் பொலிவுடன் பல மொழிகளில் மறுவடிவமைக்கப்படுகிறது பிரதமரின் போர்டல்!!

பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை இனி ஆறு ஐ.நா. மொழிகளிலும் 22 இந்திய மொழிகளிலும் படிக்க முடியும்.

Last Updated : Jul 24, 2020, 10:48 AM IST
  • PM India வலைதளத்திற்கு வரும் பயனர்கள் மொழிகளை தேர்வு செய்து செய்திகளை தங்கள் மொழியில் படிக்க முடியும்.
  • பிரதமரின் சமூக ஊடக அகௌண்டுகளின் உள்ளீடுகளும் இந்த வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும்.
  • இது தொடர்பான படிவங்கள் ஆகஸ்டு 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Trending Photos

PM India portal: புதுப் பொலிவுடன் பல மொழிகளில் மறுவடிவமைக்கப்படுகிறது பிரதமரின் போர்டல்!! title=

புதுடெல்லி, ஜூலை 24: பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மறுவடிவமைக்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் ஏஜென்சிகளிடமிருந்து கருத்துகளையும் திட்டங்களை கோரியுள்ளது. பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை இனி ஆறு ஐ.நா. மொழிகளிலும் 22 இந்திய மொழிகளிலும் படிக்க முடியும்.

தேசிய இ-கவர்னன்ஸ் பிரிவு (NeGD) மூலம் வெளியிடப்பட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையின் (RPF) படி,  வலைத்தளங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பராமரிப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த நிறுவனத்துடன், இப்பணியில் அரசாங்கம் ஈடுபட தயாராகவுள்ளது.

ஒரு விரிவான மென்பொருள் தேவை விவரக்குறிப்பைத் தயாரிப்பதும், வலைத்தளத்தின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக எண்ட்-டு-எண்ட் நிர்வகிக்கப்படும் சேவையை வழங்குவதும், இந்திய பிரதமரின் வலைதளத்தை 22 இந்திய மொழிகளிலும், ஆறு ஐக்கிய நாடுகளின் மொழிகளிலும் மொழிபெயர்ப்பதும் தேர்ந்தெடுக்கப்படும் ஏஜன்சியின் பிரதான பணியாக இருக்கும் என RPF ஆவணம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் ஆறு மொழிகள் பின்வருமாறு:

அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ்.

இந்திய மொழிகளின் பட்டியலில் அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் உள்ளன.

PM India வலைதளத்திற்கு வரும் பயனர்கள் மொழிகளை தேர்வு செய்து வலைதளத்தில் உள்ள செய்திகளை தங்கள் மொழியில் படித்துத் தெரிந்துகொள்ள ஏதுவான அனைத்துப் பணிகளையும் ஏஜன்சி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஏஜன்சி வலைதளத்தின் வடிவமைப்பு, மேம்பாடு, செயலாக்கம், பராமரிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

ALSO READ: ரயில்வே தொடர்பான முக்கியமான தகவல், அனைவருக்கும் வருகிறது இந்த புதிய விதி

வலைத்தள பயனரின் geo-location, அதாவது புவி இருப்பிடம் மற்றும் மொழி தேர்வு வரலாறு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வலைத்தளமே பயனருக்கு அவருக்கான மொழியை பரிந்துரைக்க முடியும்.

"தளத்தில் உள்ள நிலையான மற்றும் மாறும் உள்ளடக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அல்லது ஆங்கிலத்தில்/ஹிந்தியில் இருப்பது அப்படியே அந்தந்த மொழிகளில் (transliterate) எழுதப்பட்டு இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஏஜென்சிக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் Word அல்லது PDF ஃபார்மாட்டுகளில் உள்ளடக்கம் வழங்கப்படும்" என்று ஆவணம் கூறியுள்ளது.

புதிய வலைத்தளம் தற்போதுள்ள வலைத்தளத்துடன் ஒருங்கிணைந்த சமூக ஊடக தளங்கள் உட்பட அனைத்து பிரபலமான சமூக ஊடக தளங்களுடனும் நிகழ்நேர ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க முன்மொழியப்பட்டது.

"பிரதமரின் சமூக ஊடக அகௌண்டுகளின் உள்ளீடுகளும் இந்த வலைத்தளத்திலும் கிடைக்கப்பெறும்" என்று ஆவணம் கூறியுள்ளது.

இந்த பணித்திட்டம் தொடர்பான சந்தேகங்கங்களைப் பற்றிய பட்டியலை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 30 ஆகும். இறுதியான படிவங்கள் ஆகஸ்டு 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

ALSO READ: உங்கள் மகளுக்கு "சுகன்யா" திட்டத்தை வழங்குங்கள்; 21 ஆண்டுகளுக்குப் பிறகு பணக்காரர் ஆவார்

Trending News