கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பானியில் காப்பாற்றிய காவல்துறை!

சினிமா பானியில் கடத்தல்காரர்களை துரத்தி காவலர்கள் பிடித்தது அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!

PTI | Updated: Jan 30, 2018, 04:27 PM IST
கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பானியில் காப்பாற்றிய காவல்துறை!
Representational image

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பானியில் கடத்தல்காரர்களை துரத்தி காவலர்கள் பிடித்தது அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!

சந்தன் என்னும் 5 வயது சிறுவன் 4 மர்ம நபர்களால் 2 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ரூ.35 லட்சம் வேண்டுமென பினையத்தொகை கோரப்பட்டது.

இதனையடுத்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தனிப்படை அவரை தேடியது. இந்த தேடுதலில் காவல்துறையினர் அவரை கடத்தல்காரர்கள் காரில் வைத்து திரிந்தது தெரியவந்தது.

சினிமா பானியில் அந்த கடத்தல் குழுவனிரை துரத்தி, சுட்டுப் பிடித்தனர் காவல்துறையினர். இந்த சம்பவத்தில் கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட 4 பேரும் காயங்களுடன் பிடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்கள் காவல்துறையினரை எதிர் முனையில் தாக்க, தங்களின் தற்காப்புக்காக கொல்லையரை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்!