ரூ 389 கோடியில் கட்டப்பட்ட அணை; திறப்பு விழாவுக்கு முன்பே உடைந்தது

Last Updated : Sep 20, 2017, 03:10 PM IST
ரூ 389 கோடியில் கட்டப்பட்ட அணை; திறப்பு விழாவுக்கு முன்பே உடைந்தது title=

பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று திறந்து வைக்கப்படவிருந்த பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை நேற்று உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த அணை ரூ 389 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அணையை கட்ட 1977-ம் ஆண்டு ஆணையம் அனுமதி அளித்தது. பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 40 வருடங்களாக கழித்து தடுப்பணை கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.  

இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்த அணை பாகல்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் தடுப்பணை உடைந்து சுற்றி இருந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதனால் அணை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.

வெள்ளப்பெருக்கத்தால் தடுப்பணை உடைந்ததை அடுத்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என மத்திய நீர்வளத்துறை மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தடுப்பணை உடைந்ததை அடுத்து பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

 

Trending News