ராஜ்நாத் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் சாத்வி பிரக்யா!

ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்ப்பு!!

Last Updated : Nov 21, 2019, 12:27 PM IST
ராஜ்நாத் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் சாத்வி பிரக்யா! title=

ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்ப்பு!!

டெல்லி: பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர் சர்ச்சைக்குரிய எம்.பி. சாத்வி பிரக்யா, குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவரை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமித்ததால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செப்டம்பர் 29, 2008 ஆம் ஆண்டு மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். 

இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக போபால் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். இவர் நிறைய சர்ச்சையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். நாங்கள் அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டுவோம், என்பது உட்பட பல சர்ச்சையாக கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்டது நாடாளுமன்ற ஆலோசனைக் குழு. இந்த குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். காங்கிரஸ்கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, திக்விஜய சிங், சரத் பவார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய எம்.பி என கூறப்படும் பிரக்யாவிற்கும் பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி வருவதால் இவருக்கு பா.ஜ.க தலைமை பலமுறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளதும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாக கண்டிப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

Trending News