சல்மான் கானின் கருத்து துரதிருஷ்டவசமானது -அமீர் கான்

Last Updated : Jul 4, 2016, 03:46 PM IST
சல்மான் கானின் கருத்து துரதிருஷ்டவசமானது -அமீர் கான்  title=

இந்தி நடிகர் சல்மான் கான், தான் மல்யுத்த வீரராக நடித்துள்ள சுல்தான் படம் குறித்து கடந்த வாரம்  பேட்டி அளித்தார். அதில், சுல்தான் படப்பிடிப்பில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக கூறிய சல்மான்கான் தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது நேராக நடந்து செல்ல முடியாமல், பாலியல் பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண் எப்படி செல்வாளோ அந்த நிலைமையில் இருக்கிறேன்’என தெரிவித்து இருந்தார். 

சல்மான்கான்னின் இந்த பேச்சு பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மராட்டிய மகளிர் ஆணயம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், தனது கருத்துக்கு சல்மான் கான் இதுவரை மன்னிப்புகோரவில்லை.

இந்நிலையில் இதைக்குறித்து செய்தியாளர்களிடம் அமீர் கான் கூறியதாவது:- அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. ஊடக தகவல்களை வைத்து சொல்வதென்றால், சல்மான் கான் கூறியது துரதிருஷ்டவசமானது, பொறுப்பற்றது என்று நான் கருதுகிறேன் என்றார். இந்த விவகாரத்தில் சல்மான் கானுக்கு ஏதேனும் அறிவுரை வழங்கினீர்களா? என்று அமீர் கானிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆலோசனை வழங்க நான் யார்? என்று கூறிய அமீர் கான், இந்த விவகாரம் குறித்து நான் இன்னும் சல்மான் கானிடம் பேசவில்லை என தெரிவித்தார்.

Trending News