இப்படியும் சகோதரிகளா..! தங்கள் கல்லீரலையே தம்பிக்கு தானமளித்த சகோதரிகள்

உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 23, 2021, 05:30 PM IST
  • கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும்
  • இரு சகோதரிகளான நேகா (29), பெர்னா (22) தங்களது சகோதரருக்காக கல்லீரலைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர்
இப்படியும் சகோதரிகளா..! தங்கள் கல்லீரலையே தம்பிக்கு தானமளித்த சகோதரிகள் title=

உத்தர பிரதேசம் : உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது இரு சகோதரிகளான நேகா (29), பெர்னா (22) தங்களது சகோதரருக்காக கல்லீரலைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். ஒருவர் உடலில் ஒரேயொரு கல்லீரல் மட்டுமே இருக்கும் என்பதால் ஒருவர் மட்டுமே முழு கல்லீரலையும் தானம் செய்ய வாய்ப்பில்லை. இதனால் இரு சகோதரிகளும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி இருவரும் பாதி பாதி கல்லீரலை தானமாக வழங்கப் போவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான இந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை டெல்லி அருகே குர்காவ்ன் நகரிலுள்ள மெதந்தா மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டனர். 

uttar

மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அறுவைச் சிகிச்சை செய்து அக்சத்தின் உயிரைக் காப்பாற்றினர். சகோதரர்-சகோதரி உறவுகளைப் போற்றும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று இந்த அறுவைச் சிகிச்சை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் நீலம் மோகன், கல்லீரல் பாதிப்பு மட்டுமன்றி, உடல் பருமனாலும் சிறுவன் அக்சத் அவதிப்பட்டு வந்தார். அவரது சகோதரிகளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.

ALSO READ இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்; எவற்றுக்கெல்லாம் அனுமதி

தற்போது மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இதுதான் சகோதரத்துவத்தைப் போற்றும் உண்மையான ரக்ஷா பந்தன். கல்லீரல் பாதிப்பால் அவதிப்படு வோருக்கு உறவினர்கள், நண்பர்கள் பாதி கல்லீரலை தானமாக வழங்கலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றலாம் என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News