திருமண விருந்தில் விஷம் - 40 பேர் நிலைமை கேள்விகுறி!

உத்திரப் பிரதேச மாநிலம் சஜான்பூரில், திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட 40 பேர் திருமண உணவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்!

Last Updated : Feb 12, 2018, 07:00 PM IST
திருமண விருந்தில் விஷம் - 40 பேர் நிலைமை கேள்விகுறி! title=

உத்திரப் பிரதேச மாநிலம் சஜான்பூரில், திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட 40 பேர் திருமண உணவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்!

திருமணத்தில் பரிமாரப் பட்ட உணவானது ஆரோக்கிய குறைவாக இருந்ததால், Food Poison எற்பட்டு அருகாமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வானது நேற்று சஜான்பூர் பகுதியில் நடைப்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பரிமாரப்பட்ட உணவினை உண்ட பிறகு பலரும் உபாதை பிரச்சணைக்கு ஆளாகியுள்ளனர்.

பின்னர் அருகாமை மருத்துவமனைக்கு அவர்கள் கொன்டுச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் உண்ட உனவில் ஆரோக்கிய கேடான பொருள் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், அதனால் தான் இப்பிரச்சனை நடந்தேறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விழாவில் பரிமாரப்பட்ட உணவை சோதிக்க சோதனை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொன்டு வருகின்றனர்.

சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் வீடு திரும்பினர் எனினும் இன்னும் இரண்டு பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News