Weight Gain Tips Tamil | சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதேசமயம் சிலர் தங்கள் எடையை அதிகரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் உடல் எடையை அதிகரிக்க பல விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர் உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது ஆபத்தானது. உடல் எடையை குறைக்க எப்படி சரியான உணவுமுறை உள்ளிட்ட விஷயங்களை பின்பற்ற வேண்டுமோ அதைப்போலவே உடல் எடையை அதிகரிப்பதிலும் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். அந்தவகையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் காய்கறிகள் குறித்த உணவுப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
எடை அதிகரிப்பதற்கான உணவு பட்டியல்
எடை அதிகரிப்பதற்கு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். கூடுதலாக, இது நிறைய கலோரிகளைக் கொண்டிருக்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். அத்தகைய காய்கறிகள் உணவில் சேர்த்தால் உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
எடை அதிகரிக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்
உருளைக்கிழங்கு
கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலம் உருளைக்கிழங்கு. இதனை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. உருளைக்கிழங்கை வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுங்கள். உருளைக்கிழங்கு, எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
பீன்ஸ்
பீன்ஸ் வகையில் நிறைய இருக்கின்றன. அதில் எந்த வகையான பீன்ஸையும் சாப்பிடலாம். எடை அதிகரிப்பதில் பெரும் நன்மை பயக்கும். நீங்கள் கொத்து பீன்ஸ் சாப்பிடலாம், சோயாபீன்ஸ் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்த பருப்பு வகைகள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் பல வகையான சத்துக்கள் உள்ளன. பூசணி வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால், எடை குறைப்பது அல்லது அதிகரிப்பது எளிது. நீங்கள் பூசணிக்காயை காய்கறியாக சாப்பிடலாம் அல்லது பூசணிக்காயில் இருந்து வெஜிடபிள் ப்யூரி செய்வது மிகவும் சுலபம். இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி பெறலாம்.
மேலும் படிக்க | 30 நிமிட ஜாகிங் போதும்: உடல் ஆரோக்கியம் அட்டகாசமாய் இருக்குமாம்
பீட்ரூட்
பீட்ரூட் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதே அளவு கலோரிகள் இந்த காய்கறியில் காணப்படுகின்றன. இந்த கலோரிகள் எடையை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். நைட்ரேட்டுகளுடன், பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நல்ல அளவில் உள்ளன. இந்த இரண்டு கூறுகளும் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகின்றன. இது படிப்படியாக ஆரோக்கியமான எடையை அதிகரிக்க உதவுகிறது.
மக்காச்சோளம்
மக்காச்சோளம் மாவுச்சத்து நிறைந்த ஒன்று. இதனை சாப்பிடுவதன் மூலம், ஆரோக்கியமான எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். வேண்டுமானால் மக்காச்சோள விதைகளை வேகவைத்து சாப்பிடலாம். மக்காச் சோளத்தின் சூப் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பட்டாணி
ஊட்டச்சத்தின் அடிப்படையில் பட்டாணி எந்த காய்கறிக்கும் குறைவானது அல்ல. அவ்வளவு புரதச்சத்து நிறைந்தது. இது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது. பட்டாணியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அதை சாப்பிடும் முன் முறைகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. தோலுரித்து பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். உருளைக்கிழங்கைப் போலவே, பட்டாணியும் எந்த வகையான காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் சுவை அதிகரிக்கும். பட்டாணியை சாலட்டுடன் சாப்பிடலாம் அல்லது சூப்பில் சேர்க்கலாம்.
மேலும் படிக்க| Brain Health: மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ