Air India-ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 100% ஆக அதிகரிப்பு!!

ஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது!!

Last Updated : Mar 4, 2020, 05:27 PM IST

Trending Photos

Air India-ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 100% ஆக அதிகரிப்பு!! title=

ஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது!!

டெல்லி:  ஒரு பெரிய முடிவில், நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் புதன்கிழமை (மார்ச் 4) சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) ஒப்புதல் அளித்துள்ளது. குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கான (NRI) முதலீடு வரம்பு 49%-ஆக இருந்த நிலையில், 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது. பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய கேரியரில் 100 சதவீத பங்கு விற்பனையை விற்க அரசாங்கம் எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது.

ஏர் இந்தியாவில் 100 சதவீத பங்குகளை வைத்திருக்க குடியுரிமை பெறாத இந்தியர்களை (NRI) அனுமதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார். கேரியரில் குடியுரிமை பெறாத இந்தியர்கள் (NRI) 100 சதவீத முதலீட்டை அனுமதிப்பதும் SOEC விதிமுறைகளை மீறாது. NRI முதலீடுகள் உள்நாட்டு முதலீடுகளாக கருதப்படும்.

இதுவரை நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பங்குகளை 49 % என்ற அளவிற்கு வாங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஏர் இந்தியாவைப் பொறுத்த வரை அது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு, உள்நாட்டு முதலீட்டாகவே கருதப்படுவதால், ஏர் இந்தியா விற்பனையில், விமான நிறுவனங்களுக்கான சர்வதேச விதிகள் ஏதும் மீறப்படாது என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 17 ஆம் தேதி வரை வரவேற்றுள்ளது. 

Trending News